Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் ஹெலிகாப்டரில் இறங்கிய ஹவுதி படை.. இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டது எப்படி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பல் எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.

How Houthi militants hijacked India-bound cargo ship using chopper

இதற்கிடையே மறுபுறம் லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் போராளிக் குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கப்பல் கடத்தல்: நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏமனில் உள்ள ஹவுதி குழு இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலைப் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. தெற்கு செங்கடல் பகுதியில் அந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி குழு இதைக் கடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேல் ஈரானின் பயங்கரவாத செயல் என்றும் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் நடுக் கடலில் கடத்தல்! ஹவுதி கிளர்ச்சிப் படை கைவரிசை

இதற்கிடையே அது என்ன சரக்கு கப்பல்.. அது எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த ராணுவ கப்பலை ஜப்பான் இயக்கி வந்தது. இந்த சரக்குக் கப்பலைத் தான் ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி படை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் கப்பலில் இஸ்ரேலியர்கள் யாரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேல், ஹவுதி: இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இது ஈரானின் மற்றொரு பயங்கரவாதச் செயலாகும்.. இது உலகிற்கு எதிரான ஈரானின் அதிகரிக்கும் போர்க்குணத்தை காட்டுகிறது. மேலும், சர்வதேச விதிமுறைகளை மீறி அவர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஹவுதி குழுவும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். அதேநேரம் தாங்கள் கைப்பற்றியது இஸ்ரேல் கப்பல் தான் என்று சொன்ன அவர்கள், இஸ்ரேல் கூறிய மற்ற தகவல்களை நிராகரித்தனர். அதாவது இஸ்ரேலை சேர்ந்த கப்பலையே தாங்கள் கடத்தியுள்ளோம் என்பது ஹவுதி வாதமாக இருக்கிறது. தெற்கு செங்கடலில் கப்பலைக் கைப்பற்றி, அதை ஏமன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹவுதி அறிவித்துள்ளது. மேலும், கப்பலில் இருக்கும் பணியாளர்கள் இஸ்லாமிய விதிமுறைகள் படி நடத்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது:
அந்த சரக்கு கப்பல் செங்கடலில் சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது ஹெலிகாப்டர் மூலம் ஹவுதி படை தனது வீரர்களை அதில் இறக்கி, அதன் மூலம் கப்பலைக் கடத்திச் சென்றுள்ளனர். பிரிட்டன் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலை ஜப்பான் நிறுவனத்தால் இயக்கப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. அந்த கப்பலில் உக்ரைன், பல்கேரியன், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பணியாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவத்தை இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் இருந்து இறங்கி, அந்த சரக்கு கப்பலை ஹவுதி படை கடத்தியதை உறுதி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வந்த சர்வதேச சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் கண்டனம்: இது தொடர்பாக ஹவுதி படை முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இஸ்ரேல் நிறுவனம் அல்லது இஸ்ரேல் கொடியுடன் இருக்கும் அனைத்து கப்பல்களையும் குறிவைத்துக் கடத்துவோம் என்று எச்சரித்திருந்தது. அதன்படி இன்று கடத்தப்பட்ட கப்பலும் இஸ்ரேலுக்கு சொந்தமானது தான் என்று ஹவுதி கூறியுள்ளது.

இருப்பினும், இதை மறுத்துள்ள ஜப்பான், தங்கள் நாட்டை சேர்ந்த கப்பலையே ஹவுதி கடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிப்பான் நிறுவனம் இயக்கி வந்த கப்பலை ஹவுதி கடத்தியதாகத் தெரிவித்த ஜப்பான், இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டமும் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+