புயலென பாய்ந்து வந்த புல்லட்.. தடுத்து நிறுத்தி உயிரைக் காத்த பிரா
பெர்லின்: ஜெர்மனியில் 42 வயதுப் பெண்ணின் மார்பில் போய்ந்த துப்பாக்கித் தோட்டா அதிர்ஷ்டவசமாக உள்ளுக்குள் போகாமல் நின்று விட்டது. அவரைக் காத்தது அவர் அணிந்திருந்த பிராதான் என்பதுதான் ஆச்சரியமான செய்தியாகியிருக்கிறது ஜெர்மனியில்.
42 வயதான அந்தப் பெண் பெர்லினுக்கு அருகே உள்ள மெக்கன்பர்க் என்ற இடத்திற்கு விடுமுறைக்காக வந்திரு்நதார். அவரும், அவரது கணவரும் பைக்கில் ஹாயாக போய்க் கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கித் தோட்டா அப்பெண்ணின் மார்பைத் தாக்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது பிராவுடன் அந்த குண்டு நின்று விட்டது. உடலுக்குள் போகவில்லை. வேட்டைக்காரர் ஒருவரது துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த தோட்டாவாகும் அது.

ஷாக் ஆகிட்டேன்...
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், "நான் அப்படியே வலியில் சற்று நேரம் ஸ்தம்பித்து விட்டேன். உடனடியாக எனது மேல் கோட்டை கழற்றிப் பார்த்தபோது அந்தத் தோட்டா எனது பிராவின் வயர் பகுதியில் பட்டு நின்றிருந்ததைக் கண்டேன்.

கனமான வயர்...
பிராவின் வயர் பகுதி சற்று வளைந்து விட்டது. அது உறுதியாக இருந்ததால் தோட்டா உள்ளே பாயவில்லை" என்றார்.

உயிரைக் காப்பாற்றியது...
அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் கூறுகையில், "உண்மையில் அவரது பிராதான் அப்பெண்ணின் உயிரைக் காத்துள்ளது. அது மட்டும் இல்லாவிட்டால் மிகப் பெரிய காயத்தை அவர் அடைந்திருப்பார்" என்றனர்.

வழக்கு...
சம்பந்தப்பட்ட வேட்டைக்காரர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரே பால்க் கூறியுள்ளார்.

சாட்சிக்காக...
அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். இன்னும் அந்த அதிர்ச்சிச் சம்பவத்திலிருந்து அவர் மீளவில்லையாம். சம்பவத்திற்குப் பின்னர் சாட்சியத்திற்காக அவரது பிராவை போலீஸார் கேட்டுப் பெற்றுள்ளனர். கோர்ட்டிலும் அது தாக்கல் செய்யப்படுமாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications