யுரேனியம் அனுப்ப தடை.. நைஜரில் காலை வைத்தால் காலி.. அமெரிக்காவை அலற விட்ட "ஆப்ரிக்க" தளபதி! அதிருதே
நைஜர்: நைஜர் நாட்டில் நடைபெறும் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் போர் தொடுப்போம் என அண்டை ஆப்ரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரான்ஸ், அமெரிக்காவிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் உள்ளன. அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே பிராக்சி வார்களை நடத்தி வருகின்றனர்.

ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்ப்பதாக கூறி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இங்கே உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கு எதிராக இங்கே அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிப்பது வழக்கம்.
உதாரணமாக ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா ராணுவ தளவாடங்களை அமைத்து அங்கிருந்து தங்கம் மற்றும் யுரேனியத்தை கொள்ளையடித்து வந்தது. அங்கே இருந்த அதிபர்களும் இதை துணையாக இருந்தனர்.
இதையடுத்து அங்கே ராணுவ புரட்சி ஏற்பட்டு இரண்டு நாடுகளிலும் ஆட்சி கவிழ்ந்தது. அங்கே ராணுவம் வந்த பின் பிரான்ஸ், அமெரிக்கா புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியது. இங்கே ராணுவ புரட்சிகள் நடக்க ரஷ்யா மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது ஆப்ரிக்காவில் நடக்கும் ராணுவ புரட்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இன்னொரு நபர் புர்கினா பாசோ நாட்டின் ராணுவ தளபதி இப்ராஹிம் டிராரே.
இவர்தான் அங்கு கடந்த வருடம் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்து நாட்டின் அதிபர் ஆனார். அதோடு தனது நாட்டில் இருந்த பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தளவாடங்களுக்கு சீல் வைத்தார். ஆப்ரிக்கா ஆப்ரிக்கர்களுக்கே என்றும் அறிவித்தார். இதை தொடர்ந்து மாலியிலும் ராணுவ ஆட்சி வந்தது.
35 வயதே ஆகும் இப்ராஹிம் டிராரே ஆப்ரிக்காவின் ஹீரோவாக உருவெடுத்து உள்ளார். இவர் புர்கினா பாசோ என்ற ஒற்றை நாட்டில் மேற்கொண்ட புரட்சி அண்டை நாடுகளுக்கு எல்லாம் பரவ தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே நைஜீரியாவிற்கு மேலே இருக்கும் நைஜர் நாட்டில் தற்போது ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
நைஜர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் பாஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ தளபதி அப்துரஹ்மானே டிசியானி புதிய அதிபராக பதவி ஏற்று உள்ளார். இதையடுத்து நைஜரில் இருந்து பிரான்ஸ், அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு உள்ளன.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; புர்கினா பாசோ ராணுவ அதிபர் இப்ராஹிம் டிராரே நைஜரில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின் மாஸ்டர் மைண்டாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரான்ஸ், அமெரிக்காவை வெளியேற்றும் விதமாக அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியுள்ளனர். அதோடு இவர்கள் கூட்டமாக ரஷ்யாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தங்களின் நட்பு நாடு, ரஷ்யா எங்களின் உறவு என்று அறிவித்துள்ளனர். இந்த ஆப்ரிக்க நாடுகளில் புரட்சி ஏற்பட ரஷ்யா மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது ஆப்ரிக்க வளங்களை மேற்கு உலக நாடுகள் கொள்ளையடிப்பதை தடுக்க ஆப்ரிக்க நாடுகளில் ராணுவ புரட்சியை கொண்டு வந்ததே ரஷ்யாதான் என்று கூறப்படுகிறது.
இதற்கு மாஸ்டர் மைண்டாக செயல்படுபவர்தான் புர்கினா பாசோ ராணுவ அதிபர் இப்ராஹிம் டிராரே. 35 வயதே ஆகும் இவர்.. நைஜர் மீது மேற்கு உலக நாடுகள் கை வைத்தால், அங்கே ராணுவ ஆட்சியை கவிழ்க்க முயன்றால் போர் தொடுப்போம் என்று கூறி உள்ளார்.
அதோடு அமெரிக்கா, பிரான்சுக்கு யுரேனியம் அனுப்புவதை தடை செய்துள்ளார். உலகின் 17 சதவிகிதஹ் யுரேனியம் தேவையை நைஜர்தான் பூர்த்தி செய்கிறது. ஆனாலும் நைஜர் இத்தனை காலமாக வறுமையில் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி அங்கிருந்து பிரான்ஸ், அமெரிக்காவை நைஜர் படைகள் வெளியேற்றி உள்ளன. ஆப்ரிக்கா ஆப்ரிக்காவிற்கே என்ற முழக்கத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications