தானோஸ் மாதிரி டிரம்ப் போட்ட சொடக்கு.. ரத்தக்களரியாக மாறிய இந்திய பங்கு சந்தை.. எல்லாம் போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.

USA Donald Trump Visa

1. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.

2. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறையும்.

3. அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

4. முக்கியமாக இந்திய மார்க்கெட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன. . இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. இதனால் இந்திய மார்க்கெட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன.

5. நாம் அமெரிக்காவிற்கு மென்பொருட்கள் சர்வீஸ்களை ஏற்றுமதி செய்கிறோம். சீனாவில் இருந்து சரக்கு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இப்போது அமெரிக்காவின் வரி விதிப்பால்.. இப்போது இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை சமப்படுத்த அமெரிக்காவிலிருந்து அதிக ஐபோன்கள், ஜிபியுக்கள், எல்பிஜி, அணுமின் நிலைய சேவைகள், போர் விமானங்கள், விஸ்கி போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

6.அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் வரும் நாட்களில் நிலைமை மோசமாகும். வர்த்தக போரை தொடங்க தானோஸ் போல டிரம்ப் போட்ட சொடக்கு காரணமாக மொத்த இந்திய சரிந்து அதலபாதாளத்திற்கு செல்ல தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+