60+ குழந்தைகள்.. அப்படியே ஒரு ஜாடை! கார் பார்கிங்கில் இளைஞர் செய்த பலே காரியம்! மிரண்ட பெற்றோர்கள்
குழந்தையில்லாத பெண்களை குறிவைத்து பெரிய மோசடி நடந்துள்ளது.
கான்பெரா: குழந்தையின்மை இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் பல பெயர்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய மோசடியைச் செய்துள்ளார்.
மாறி வரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அனைத்து நகரங்களிலும் புதிது புதிதாகத் தொடங்கப்படும் கருத்தரிப்பு மையங்களே இதற்குச் சாட்சி.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்தாலும் கூட.. ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் மக்கள்தொகை குறையும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

குழந்தையின்மை
இப்போது திருமணம் செய்து கொள்ளும் பல தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆர்வம் காட்டுவதில்லையாம். அதேபோல குழந்தையின்மையும் இதற்கு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. குழந்தையைப் பெற்றுக் கொள்ள மெத்தப் படித்தவர்களும் கூட பல லட்சம் வரை செலவு செய்கிறார்கள். அந்தளவுக்குக் குழந்தையின்மை பிரச்சினையாக மாறியுள்ளது. அதேநேரம் குழந்தையில்லாமல் சிகிச்சை பெற வரும் தம்பதிகளைக் குறிவைத்து சில மோசமான குற்றச் சம்பவங்களிலும் கூட ஈடுபடுகிறார்கள்.

ஆஸ்திரேலியா
அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.. தனியாக வாழும் பெண் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலோ.. அல்லது ஆண் துணைக்கு எதாவது பிரச்சினை இருந்தாலோ.. விந்தணு கொடையாளிகளிடம் இருந்து பெறப்படும் விந்தணுக்கள் மூலம் பெண்களைக் கருத்தரிக்க வைப்பார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி வெவ்வேறு போலி பெயர்களைப் பயன்படுத்தி சுமார் 60க்கும் மேற்பட்டோருக்குத் தனது விந்தணுக்களை தானம் செய்துள்ளார்.

மோசடி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் தெரியவில்லை... பல போலி பெயர்களைப் பயன்படுத்தி, விதிகளை மீறி அவர் பல தன்பாலின பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பல ஆண்டுகளாகவே அவர் இதை யாரிடமும் மாட்டாமல் செய்து வந்துள்ளார். சமீபத்தில் தன்பாலின பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரே போல இருக்கும் குழந்தைகள்
அங்கு அனைத்து குழந்தைகளும் ஒரே போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்த அவர்கள், உடனடியாக கருத்தரிப்பு மையங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தான் ஒரே நபர் தான் அனைத்து அனைத்து இடங்களிலும் விந்தணுக்களை தானம் செய்துள்ளதை இவர்கள் கண்டுபிடித்தனர். அவர் சிட்னியில் மட்டுமே தனது விந்தணுவை அதிகாரப்பூர்வமாக தானம் செய்துள்ளார். இருப்பினும், போலி பெயர்களைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் சட்டவிரோதமாக அவர் பல இடங்களில் தனது விந்தணுக்களை விற்றுள்ளார்.

குற்றம்
ஆஸ்திரேலியா சட்டப்படி மனித விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானது. இது தொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், இப்போது குழந்தையின்மை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மூலம் பலரும் இதுபோல சட்டவிரோதமாக கிப்டகளை கொடுத்து விந்தணுக்களை தானமாகப் பெறுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கார் பார்கிங்
ஆஸ்திரேலியாவில் விந்தணு தானம் தொடர்பாக பேஸ்புக்கில் விளம்பரம் கொடுக்கவே பல பக்கங்கள் உள்ளன. அவர்களை மருத்துவமனைகளுக்கு வெளியே கார் பார்க்கிங் அல்லது ஹோட்டலில் சந்தித்து கொடையாளர்களிடம் இருந்து விந்தணுக்களை வாங்கிக் கொள்கிறார்கள். இது சட்டவிரோதமானது என்றாலும் கூட குழந்தையின்மை பிரச்சினையால் பெற்றோர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவே உள்ளனர். இதைச் சிலர் தவறாகப் பயன்படுத்த அது ஆபத்தில் முடிந்துவிடுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications