For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜி ஜின்பிங் மாயம், ராணுவ புரட்சி! தகவல் பரவ ஓ இதுதான் காரணமா... உண்மையில் சீனாவில் நடந்தது என்ன

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா குறித்தும் அதிபர் ஜி ஜின் பிங் குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இவை எல்லாம் எப்படித் தொடங்கியது எனப் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாகவே சீனா குறித்த செய்திகள் தான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தது. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததாகப் பலரும் கூறி வந்தனர்.

இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்று இருந்தார்.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

 பரவிய தகவல்

பரவிய தகவல்

கொரோனா பரவலுக்குப் பின்னர் ஜி ஜின்பிங் வெளிநாடு சென்றது அதுவே முதல்முறையாகும். அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், அப்போது முதல் இவர் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஜி ஜின்பிங் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதாவது உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய போது ஜி ஜின்பிங் விமான நிலையத்திலேயே அந்நாட்டு ராணுவம் கைது செய்ததாகவும் அங்கு ராணுவ புரட்சி நடைபெற்றதாகவும் எல்லாம் தகவல் பரவியது.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இதுபோன்ற பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவும் தான். அப்படியான சூழல்களில் சம்மந்தப்பட்ட அரசிடம் இருந்து மறுப்பு வந்துவிடும். இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் சீனாவிடம் இருந்து எவ்வித கருத்தும் சில நாட்கள் வரவில்லை. இது வதந்தி பரவ காரணமாக இருந்தது. இறுதியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் இந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

 எப்படி பரவியது

எப்படி பரவியது

சரி விஷத்திற்கு வருவோம்.. இந்த வதந்தி எப்படி பரவியது? இந்த வதந்தி அனைத்தையும் தொடங்கி வைத்தவர் ஜாவோ லான்ஜியன். நியூயார்க்கில் வசிக்கும் இவர், நியூ டாங் டைனஸ்டி நிறுவனத்தில் அவ்வப்போது கட்டுரை எழுதி வந்தார். இந்த நிறுவனம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார துஷ்பிரயோகங்களை எப்போதும் விமர்சித்து வரும். இவர் தான் முதலில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அது தான் காட்டுத்தீ போலப் பரவியது.

 விமானங்கள்

விமானங்கள்

அவர்கள் ஜி ஜின்பிங் காணாமல் போனது மற்றும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகப் பரவிய தகவல் குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டனர். இத்துடன் வேறு சில முக்கியமானவர்களும் சீனா குறித்த தகவல்களை வெளியிட விஷயம் பரபரப்பானது. சீன விமானங்கள் ரத்து, ராணுவ வாகனங்களில் நடமாட்டம் குறித்து எல்லாம் பரவிய தகவல்கள் எல்லாம் ராணுவ புரட்சி என்ற அந்த வதந்திக்கு வலுசேர்ப்பதாக இருந்தது.

 சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த தவறான தகவல்கள் பரவுவதில் சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகித்தன. இது சமூக வலைத்தளங்களில் இந்த போலி தகவல்கள் எப்படிப் பரவியது மினி ஆய்வையே நடத்திவிட்டார். இதில் அவர் 48 மணி நேரம் 50 ஆயிரம் கணக்குகளில் இருந்து வந்த ட்வீட்களை ஆய்வு செய்துள்ளார். அதில் பெரும்பாலான ட்வீட்களில் சீனாவில் ராணுவ கவிழ்ப்பு நடந்தாக சொல்லவில்லை. மாறாக அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இப்படி தகவல்கள் பரவுகிறது என்றும் பதிவிட்டு இருந்தனர்.

 ட்வீட்கள் எப்படி

ட்வீட்கள் எப்படி

இப்படிப் பல ஆயிரம் பேர் சீன ஆட்சி கவிழ்ப்பு குறித்து கருத்து பதிவிடத் தொடங்கினர். சீன ஆட்சி கவிழ்ப்பு குறித்து ட்வீட் செய்தவர்களில் பெரும்பாலானோர் ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்கள் இது பொய் தகவல் காட்டுத்தீ போலப் பரவ உதவியுள்ளது. இத்துடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய உடன் மாயமானார். இதுவே பொய் தகவல்கள் பரவ காரணமாக அமைந்துவிட்டது.

அதிருப்தி

அதிருப்தி

சீன அதிபர் ஜி ஜின்பிங்கி மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு உள்ளது உண்மை தான். அவரது செயல்பாடுகள் காரணமாகச் சொந்த கட்சியினரும் முக்கிய அமைச்சர்களும் கூட அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய போது மாயமானது, ஆட்சி கவிழ்ப்பிற்கான வதந்திகள் பரவ காரணமாக அமைந்தது. இருப்பினும், சீனாவில் ராணுவத்தைத் தாண்டி சொந்த கட்சியிடம் தான் ஜி ஜின்பிங்கிற்கு எதிர்ப்புகள் அதிகம் உள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர்.

English summary
Reason behind the rumors of China president Xi Jinping: China president Xi Jinping made his public appearance after coup rumor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X