4 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரர்.. இன்ச் மாறாமல் தட்டி தூக்கிய உக்ரைன் ஸ்னைப்பர்.. இது புது சாதனை
மாஸ்கோ: உக்ரைன் போரில் சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரரை, உக்ரைன் ஸ்னைப்பர் ஒருவர் வெற்றிகரமாகத் தட்டித்தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா கடந்தாண்டு உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த போரில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பிறகு உக்ரைன் பதிலடியை ஆரம்பித்தது.

இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தட்டி தூக்கிய ஸ்னைப்பர்: இதற்கிடையே போரில் அரங்கேறிய மிரள வைக்கும் சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்து ஒரு ரஷ்ய வீரரை உக்ரைன் ஸ்னைப்பர் சுட்டுக் கொன்றுள்ளார். இத்தனை தொலைவில் இருந்தவரை வெற்றிகரமாகச் சுட்டுத் தள்ளிய அந்த உக்ரைன் ஸ்னைப்பர் 52 வயதான முன்னாள் தொழிலதிபர் வியாசெஸ்லாவ் கோவல்ஸ்கி என்பவர் என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த நபரை அவர் சுட்டு தள்ளியுள்ளார். அதாவது உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், கத்திப்பாராவில் இருந்த நபரை அசோக் பில்லர் அருகே இருந்து சுட்டு வீழ்த்தி இருக்கிறார். அந்த புல்லட் சென்று சேரவே சுமார் 9 நொடிகள் ஆகியுள்ளது. இந்த புல்லட் பட்ட அடுத்த நொடி அந்த ரஷ்ய வீரர், உடல் சிதறி உயிரிழந்தார்.
ஸ்னைப்பர் தாக்குதல்: இது குறித்து அந்த ஸ்னைப்பர் கூறுகையில், "உக்ரைன் வீரர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை ரஷ்யர்கள் இப்போது புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இனி துப்பாக்கி குண்டுகள் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களைத் தாக்கும். அவர்கள் வீட்டில் உட்கார்ந்து பயப்படட்டும். உக்ரைன் வீரர்கள் ரஷ்யர்களை வீழ்த்துவது உறுதி" என்று அவர் தெரிவித்தார்.
அந்த ஸ்னைப்பரும் அவருக்கு உதவும் ஸ்பாட்டரும் ரஷ்ய வீரர்கள் சிலர் மரம் வெட்டி வருவதைக் கவனித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் சாதாரண வீரர்கள் என்பதால் தாக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இருப்பினும், அப்போது அங்கே மற்றொரு கேங் அருகே வந்துள்ளது. அதில் இருந்த உயர் அதிகாரி இவர்களுக்கு உத்தரவிடுவதைக் கவனித்துள்ளார். இதற்காகக் கொட்டும் பனியில் இலக்கில் இருந்து சுமார் 3.8 கிமீ தொலைவில் அவர் பல மணி நேரம் காத்து இருந்துள்ளார்.
ஸ்பாட்டர்: அவரது ஸ்பாட்டர் சூழ்நிலை தெளிவாக உள்ளதால் ஷாட் எடுக்கலாம் எனக் கூறியிருக்கிறார். மேல் அதிகாரியும் தாக்குதல் நடத்த அனுமதித்த நிலையில், அந்த ஸ்னைப்பர் எவ்வளவு தொலைவில் இலக்கு இருக்கிறது, காற்றின் வேகம், வானிலை தரவுகள், ஈரப்பதம், வெப்பநிலை குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதன் பிறகு அவர் ஷாட் எடுத்துள்ளார். அந்த ஸ்னைப்பர் முதலில் தயங்கியிருக்கிறார். இருப்பினும், காற்று தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால் உடனடியாக ஷாட் எடுக்கும்படி அவர் ஸ்பாட்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளும் இணையத்தில் டிரெண்டானது. அதில் நீண்ட தொலைவில் நின்று கொண்டிருந்த ரஷ்ய ராணுவ அதிகாரி திடீரென சரிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த துப்பாக்கிக் குண்டு ரஷ்ய வீரரைத் தாக்க 9 நொடிகள் ஆன நிலையில், அதற்குள் அந்த ஸ்னைப்பர் அங்கிருந்த கிளம்பவே தொடங்கிவிட்டராம்.
அதிர்ஷ்டம் தான்: 3.8 கிமீ தொலைவில் இருப்பவரை வெற்றிகரமாக ஸ்னைப்பர் ஒருவர் சுட்டுக் கொன்றது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 850 அடிதான் சாதனையாக இருந்தது. அதேநேரம் இந்த விவகாரத்தில் ஸ்னைப்பர்கள் பலரும் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். சுமார் 1.3 கிமீ மேல் இருக்கும் நபரை எந்தவொரு ஸ்னைப்பராலும் சுட்டுக் கொல்ல முடியாது என்று கூறும் அவர்கள், இது திறமை என்பதைத் தாண்டி அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications