2025 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. தட்டி தூக்கிய ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ!
ஸ்டாக்ஹோம்: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படும். அதன்படி இப்போது 2025 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) என்பவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படும். ஆல்பிரட் நோபல் என்ற சுவீடன் தொழிலதிபர் நினைவாக 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் 2025 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) என்பவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications