நான் நாளை இறந்துவிடுவேன்: லிங்க்ட்இன்னில் அறிவித்த தொழில் அதிபர்
லண்டன்: நான் திங்கட்கிழமை இறந்துவிட்டேன் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் நாளை தான் தற்கொலை செய்து கொள்ள உள்ளதை முன்கூட்டியே லிங்க்ட் இன் மூலம் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள சட்டன் பகுதியைச் சேர்ந்தவர் சைமன் பின்னர்(57). கேர்மார்க் என்ற நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் டைரக்டராக இருந்த அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வந்துள்ள நோயால் அவரது நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் பாதிக்கப்படும்.
இதையடுத்து அவர் கேர்மார்க்கில் தனது பதவியை வேறு ஒருவருக்கு அளித்துவிட்டு முக்கியம் இல்லாத பதவியை தேர்வு செய்தார். தனது நோய்க்கு தீர்வு இல்லை என்பதை உணர்ந்த சைமன் சுவிட்சர்லாந்தில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்ய உதவும் மருத்துவமனையில் சேர்கிறார்.
அவர் நாளை மருத்துவர்களின் உதவியுடன் தனது உயிரை மாய்த்துக் கொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் லிங்க்ட்இன்னில் கூறியிருப்பதாவது,
நான் சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 19ம் தேதி இறந்துவிட்டேன். எனது இறுதிச் சடங்குகள்நவம்பர் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. யாருக்கும் எனக்கு வந்த நோய் வரக்கூடாது. அதற்கு பதிலாக விபத்தில் இறந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
சைமன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் சுவிட்சர்லாந்திற்கு பதில் தனது நாட்டிலேயே மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications