நான் மீண்டும் ஸ்டேடியத்திற்கு வருவேன்.. முடிஞ்சா தொட்டுப்பாருங்க ரேஞ்சில் மல்லையா சவால்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன் டிராபியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, தொழிலதிபர் விஜய் மல்லையா விஐபி கேலரியில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததது.

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில், சுமார் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு தப்பியோடி மல்லையாவுக்கு நீதிமன்றங்கள் பல எச்சரிக்கை உத்தரவுகளை பிறப்பித்திருந்தன. இந்த நிலையிலும் அவர் கிரிக்கெட் போட்டியை கண்டு கழித்தார்.

I intend to attend all games to cheer the India team, says Vijay Mallya

இதன்பிறகு அவர் நடத்தி வரும் ஆர்சிபி அணியின் கேப்டன் கோஹ்லி, ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் மல்லையா பங்கேற்றுள்ளார். மல்லையாவை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிக்கொண்டுள்ளன.

இதுகுறித்து அலட்டிக்கொள்ளாத மல்லையா, கொஞ்சமும் கூச்சப்படாமல் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் நேரில் கண்டு ரசித்தது குறித்து பெரிய அளவில் சென்சேஷனலாக மீடியாக்களில் செய்தி வெளியிடப்படுகிறது. இனிமேலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் நான் ரசிகனாக பங்கேற்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சவால்விடும் தொனியில் தெரிவித்துள்ளார் மல்லையா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+