வங்கதேச விடுதலைக்காக.. 20 வயதிலேயே போராடினேன்.. போலீசார் கைது செய்தனர் .. பிரதமர் மோடி பேச்சு
டாக்கா: வங்க தேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 வயதில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறினார்.
Recommended Video

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் பிரதமர் மோடி டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக டாக்கா வந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா, விமான நிலையத்துக்கு வந்திருந்து பிரதமர் மோடிக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

பெருமை அளிக்கிறது
பிரதமர் நரேந்திர மோடியும், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவும் இருநாடுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேசினார்கள். அதைத்தொடரந்து வங்க தேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக அந்நாட்டு சகோதர சகோதரிகளுடன் நின்ற இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு இன்று நான் மரியாதை செலுத்துகிறேன். வங்கதேசத்திற்கான விடுதலைப் போரில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் கலந்து கொண்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

உறவு பலமானது
இன்று வங்கதேசத்தில், தங்கள் விடுதலைக்காக போராடியவர்களின் இரத்தமும், இந்திய வீரர்களின் இரத்தமும் ஒன்றாகப் பாய்கின்றன. இந்த இரத்தம் ஒன்றுபட்ட உறவை உருவாக்கும், அது எந்த வகையான அழுத்தத்தின் கீழும் முறிந்துவிடாது. எந்தவிதமான இராஜதந்திரத்திற்கும் இருநாடுகளுக்கு இடையேயான உறவு இரையாகாது.

மோடி அழைப்பு
இந்தியாவிற்கும் வங்கதேத்திற்கும் இடையில் 50 ஆண்டுகாலமாக நட்பு உறவு தொடர்கிறது. வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோரை இந்தியாவுக்குச் சென்று எங்கள் ஸ்டார்ட் அப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேரவும், எங்களின் சிறப்பான தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் அழைக்க விரும்புகிறேன். வங்கதேச இளைஞர்களுக்காக ஸ்வர்ணா ஜெயந்தி உதவித்தொகையை அறிவிக்கிறேன்.

வங்கதேச சுதந்திரம்
பாகிஸ்தான் இராணுவம் இங்குள்ள மக்கள் மீது செய்த கொடுமைகளின் படங்கள் எங்களை திசை திருப்ப பயன்படுத்தின. பல நாட்களாக அந்த படங்கள் எங்களை தூங்க விடவில்லை: வங்கதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேசத்தன் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டேன். இது எனது வாழ்க்கையின் ஆரம்ப கட்ட போராட்டங்களில் ஒன்றாகும். நானும் எனது நண்பர்களும் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டோம். அப்போது எனக்கு 20-22 வயது இருக்கும்" இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications