தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்: அமெரிக்காவில் ராகுல்
கலிபோர்னியா: இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது; தமிழ் மொழிக்கு அச்ச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியர்கள் புத்திசாலிகள் என அமெரிக்கா சொல்கிறது எனில் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்தியாவின் மரியாதையையும் கலாசாரத்தையும் சுமந்து நிற்கிறீர்கள். இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்டது (Union of States). அனைத்து மொழிகள், கலாசாரம், வரலாறு இந்திய அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்திய அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மொழி என்பது தமிழர்களுக்கு மிகவும் உயர்வானது; அது ஒரு மொழி மட்டும் அல்ல. அது தமிழர்களின் வரலாறு; கலாசாரம்; தமிழர்களின் வாழ்வியல் சார்ந்தது. ஒருபோதும் தமிழ் மொழியை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழ் மொழியை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்த இந்தியா என்ற கட்டமைப்பையே அச்சுறுத்துவதாகவே நான் கருதுகிறேன். வங்க மொழி, பஞ்சாபி, கன்னட மொழி, இந்தி ஆகிய அனைத்தும் இந்தியாவில் தாக்குதலுக்குள்ளாகின்றன. இந்தியர்களாகிய நமது பலமே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஒருவரை ஒருவர் அங்கீகரித்து இணைந்து செயல்படுவதுதான் நமது பலம்.
நாங்கள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினோம். இந்திய சமூகத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு எக்ஸ்ரே போன்ற்து ஜாதிவாரி கணக்கெடுப்பு. பல்வேறு சமூகங்கள், ஜாதிகளைச் சேர்ந்த மக்களின் விவரங்களை கணக்கெடுக்கக் கூடியது அது. இதன் மூலம் யார் யாருக்கு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது வரையறை செய்யப்படுவது எளிதானதாக இருக்கும். ஆகையால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜகவுக்கு அழுத்தம் தருகிறோம். ஆனால் பாஜகவோ இதனை ஏற்க மறுக்கிறது. இந்தியாவில் எதனையுமே புரிந்து கொள்ள மறுக்கிற- இந்தியாவில் தங்களுக்குதான் அத்தனையும் தெரியும் என்கிற கூட்டம்தான் அதிகாரத்தில் இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications