Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுரேனியம் செறிவூட்டல்.. மீண்டும் சீனுக்குள் வரும் ஈரான்! அப்போ.. அமெரிக்கா தாக்குதல் வேஸ்ட்டா!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: நாங்கள் நடத்திய தாக்குதலில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், வெறும் ஒரு சில மாதங்களில் ஈரான் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கிவிடும் என்று ஐநாவின் கீழ் செயல்படும் 'சர்வதேச அணுசக்தி அமைப்பு'(IAEA) தெரிவித்திருக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவின் தாக்குதல் வேஸ்ட்டா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது அல்லது ஆயுதங்களை உற்பத்தி செய்ய தேவையான வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்ட காலமாக விமர்சித்து வந்திருந்தன. இதனை ஈரான் உள்ளபடியே மறுத்தும் வந்திருந்தது. ஆனாலும், கடந்த 13ம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் நேரடியாக தாக்குதலை நடத்தியது.

Iran uranium nuclear

இந்த தாக்குதல்கள் ஈரானின் அணு ஆய்வு மையங்களை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், இனி ஈரான் அணு ஆய்வு விஷயங்களை தொடர குறைந்தது 20-30 ஆண்டுகளாவது ஆகலாம் என்று அமெரிக்கா கூறி வந்தது. டிரம்பும் இதை ஆழமாக கூறியிருந்தார். ஆனால், இதையெல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் IAEA புது அப்டேட்டை கொடுத்திருக்கிறது.

அதாவது, ஈரான் சில மாதங்களில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய தயாராகிவிடும் என்று IAEA தலைவர் ரஃபேல் கிராஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.

நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். "ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் சில பகுதிகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றன. சில மாதங்களில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய சில சென்ட்ரிஃப்யூக்களை ஈரானால் இயக்க முடியும். இன்னும் சரியாக சொல்வதெனில், ஓரிரு மாதங்களிலேயே இதை ஈரான் செய்ய கூடும்" என்று கூறியுள்ளார்.

ஈரானிடம் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் சுமார் 400 கிலோ வரையில் கையிருப்பு இருந்தது. இதை அமெரிக்கா அழிக்கவில்லை. தாக்குதலுக்கு முன்னர் இதனை ஈரான் பத்திரமாக பதுக்கிவிட்டது. இப்போது அந்த யுரேனியம் எங்கு இருக்கிறது என்பதுதான் கேள்வி. 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து நிச்சயம் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது. இதற்கு யுரேனியம் 90% வரை செறிவூட்டப்பட வேண்டும்.

சிக்கல் என்னவெனில், 0% லிருந்து 20% வரை யுரேனியத்தை செறிவூட்ட கொஞ்ச காலம் எடுக்கும். அதேபோல, 20%லிருந்து 60%க்கு செறிவூட்டவும் கொஞ்ச காலம் ஆகும். ஆனால், 60%லிருந்து 90%க்கு போக குறைந்த நேரம்தான் எடுக்கும். எனவே உடனே ஆணு ஆயுதத்தை ஈரானால் தயார் செய்துவிட முடியும். இதை செய்யக்கூடாது என்பதால்தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால், செறிவூட்டலை முழுமையாக தடுக்க முடியவில்லை என்பதுதான் தற்போதைய விஷயம்.

"இந்த யுரேனியம் எங்கே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. தாக்குதலின்போது சில யுரேனியம் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம். இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என்றும் ரஃபேல் கிராஸ்ஸி கூறியுள்ளார்.

IAEAக்கு மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. இது ஈரானின் அணு ஆய்வுகளை இதற்கு முன்னர் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் தாக்குதலையடுத்து, IAEA கண்காணிப்பை விலக்கிக்கொள்வதாக ஈரான் அறிவித்தது. எனவே ஈரானுக்குள் என்ன நடக்கிறது என்பதை IAEAக்கு இனி தெரியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+