கடும் பனிப்புயல்: அமெரிக்கா, கனடாவில் மின்சாரமின்றி 5 லட்சம் பேர் தவிப்பு - 24 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலின் தாக்கத்தினால் சுமார் 5 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், 24 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டது. இதனால் நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
அதேபோல், கனடாவின் கிழக்குப் பகுதியிலும் வீசி வரும் பனிப்புயலால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான சேவை பாதிப்பு....
பனிப்புயலின் காரணமாக அமெரிக்காவிலிருந்து கிளம்ப வேண்டிய சுமார் 7,000 விமானங்கள் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியாததால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

மின் இணைப்பு துண்டிப்பு...
பனிப்புயலின் காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மிக்சிகன் நகரில் 2,50,000 பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று மைனே நகரிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் அவதிபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீராக தாமதமாகும்....
சிதைந்துள்ள இணைப்புகளை மீண்டும் சீராக்க நாட்களாகலாம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

வழுக்கும் சாலைகள்...
அதேபோல் மீண்டும் சரி செய்யப்படாத சாலைகளும், நடைபாதைகளும் வழுக்ககூடிய அபாயம் இருக்கும் எனவே பொதுமக்கள் கவனமுடன் செயல் படவும் வலியுறுத்தப் பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை....
மோசமான வானிலையின் காரணமாக கனடாவில் 10 பேரும், அமெரிக்காவில் 14 பேரும் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications