பயம் காட்டிட்டாங்க பரமா! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இஸ்ரேலின் முக்கிய புள்ளி.. ஹிஸ்புல்லா ஆடிய ஆட்டம்!
டெல்அவிவ்: லெபனான் மீது இஸ்ரேல் போரை அறிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. ஹிஸ்புல்லா நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.
மத்திய கிழக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதே வரலாற்று பிழை என பல்வேறு, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசமாகும். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மனின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வந்த யூதர்களுக்கு மத்திய கிழக்கு அடைக்கலம் கொடுத்தது. உன்மையில் அடைக்கலம் கொடுக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு விருப்பமில்லை, ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அரசியலால் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

சுற்றி இஸ்லாமியர்கள் இருக்க.. இஸ்ரேல் மட்டும் யூத நாடாக பரிணமித்தது. பிரச்னை இதுவல்ல! தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் என்கிற மனநிலையுடன் யூதர்கள் மேற்கொண்ட பல விஷயங்கள்தான் பஞ்சாயத்து வெடிக்க முடிக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மனநிலையுடன் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது. இந்த நடவடிக்கைகளுக்கு துணையாக அமெரிக்கா நின்றது. விளைவு, ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் உருவாகின.
கடந்த ஆண்டு இந்த குழுக்கள் (ஹமாஸ்) இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்க, இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கியது. இது போராக தற்போது நீடித்து வருகிறது. இந்த போர் இஸ்ரேல் vs பாலஸ்தீனம்(காசா/ஹமாஸ்) என்பதை தாண்டி, லெபனான் வரை நீடித்திருக்கிறது. இதற்கு முழு காரணம் இஸ்ரேல்தான்.
லெபானான் என்பது ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாகும். எனவே ஹிஸ்புல்லா பதில் தாக்குதலில் இறங்கியது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் தற்போது பதற்றமான சூழலில் இருக்கிறது. நேற்றிரவு, இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா திடீரென ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் கோலானி பகுதியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ட்ரோன் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் பல அதிநவீன தடுப்பு கருவிகளை கொண்டிருந்த போதிலும், இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. அதேபோல தாக்குதல் நடக்கும்போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காமல் இருந்திருக்கிறது.
இதில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெர்சி ஹலேவி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. இப்போது அவர் நூலிழையில் தப்பித்து இருப்பதாகவும், விரைவில் எங்களை அழிக்க நினைப்பவர்களை அழிப்போம் எனவும் ஹிஸ்புல்லா கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்படுத்துள்ள பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications