‛முஸ்லிம்களின் பாதுகாப்பு’.. நான் பிரதமர் மோடியுடன் உரையாடினால்.. இதுதான் நடக்கும்! பரபரத்த ஒபாமா
வாஷிங்டன்: பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் அரங்கேறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்க வேண்டும் ஜோபைடனுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தனர். முதலீடு, தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினர்.

அதன்பிறகு இரவில் பிரதமர் மோடிக்கு , ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இரவு உணவு வழங்கினார். முன்னதாக அதிபர் ஜோபைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றது முதல், இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜோபைடன் கேள்வி கேட்க வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் சில பத்திரிகைகள் கோரிக்கை வைக்கப்பட்டன.
அதன்படி பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் ஒருவர், ‛‛இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி கேட்டார். அதற்கு பிரதமர் மோடி ‛‛இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் ஜனநாயக நாடுகள்.
ஜனநாயகம் என்பது டிஎன்ஏவில் உள்ளது. அதன்படியே அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது. எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை'' என பதிலளித்தார். இந்நிலையில் தான் ஜோபைடன்-பிரதமர் மோடியின் சந்திப்புக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு ஏதென்ஸில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேட்டியளித்தார்.
அப்போது அவர் பிரதமர் மோடியை தனது நண்பர் என குறிப்பிட்டார். மேலும் நான் பிரதமர் மோடியை சந்தித்தால் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசி இருப்பேன் என வெளிப்படையாக தெரிவித்தார். இதுதொடர்பாக பராக் ஒபாமா கூறியதாவது:
‛‛இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனக்கு நன்கு அறிந்த நண்பர் பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால் ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்து இருப்பேன்.
இதுதொடர்பான வாதம் தான் முக்கிய பகுதியாக இருந்திருக்கும். அதோடு இத்தகைய பிரச்சனை னெ்பது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது எனக்கூறி இந்த விஷயங்கள் பற்றி நேர்மையான முறையில் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன் என்று தெரிவித்து இருப்பேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications