பாகிஸ்தானுக்கு நேரடி ஆதரவு அளிக்கும் 3 நாடுகள் இதுதான்.. யாருனு பாருங்க! இந்தியாவுக்கு பெரிய சிக்கல்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வரும் நிலையில் ஒருவேளை போர் வெடித்தால் பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் நேரடியாக ஆதரவு அளிக்கும் என்ற பரபரப்பான தகவல் என்பது வெளியாகி உள்ளது. அந்த நாடுகள் என்னென்ன? அவர்கள் பாகிஸ்தான் பக்கம் இருப்பது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான்.. அண்டை நாடாக இருந்தாலும் கூட நமக்கு ஆகாத நாடாக உள்ளது. நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடி வருவதோடு, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது இந்த பாகிஸ்தான். இதனால் தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடக்கம் முதலே நல்ல உறவு என்பது இல்லை.

இதற்கிடையே தான் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது.
இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் நம் நாட்டு படை வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதரிடி தாக்குதலை நடத்தலாம். இதற்காக முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. நம் நாடு பாகிஸ்தானை தாக்கும்போது பாகிஸ்தானும் பதிலுக்கு நம்மை தாக்கும். இதனால் இருநாடுகள் இடையேயான இந்த பிரச்சனை என்பது போராக வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இப்படி போர் வெடித்தால் பல நாடுகளும் நம் நாட்டுக்கு ஆதரவாக தான் இருக்கும். ஏனென்றால் காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. அதோடு இந்தியாவின் பக்கம் நிற்பதாக அறிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தானுடன் போர் உருவாகும் பட்சத்தில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் பக்கம் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளையில் 3 நாடுகள் மட்டும் தவறு செய்யும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த 3 நாடுகள் எது? எதற்காக பாகிஸ்தான் பக்கம் ஆதரவு அளிக்க உள்ளன? என்பது பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த லிஸ்ட்டில் முதலாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. இந்த நாடு நமக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. பாகிஸ்தான் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடுகிறது என்றால் சீனா நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம், லடாக் பிரதேசங்களுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.
இதனால் இருநாடுகளும் அடிப்படையில் நமக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளன. அதேபோல் பாகிஸ்தானுடன், சீனாவுக்கும் நெருக்கமான உறவு என்பது உள்ளது. பாதுகாப்பு துறை முதல் வர்த்தகம் வரை இருநாடுகள் இடையே நல்ல பந்தம் உள்ளது. அதேபோல் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டத்தின் கீழ் சீனா பல பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானில் முதலீடு செய்துள்ளது. அதேபோல் சீனா பாகிஸ்தானுக்கு துறைமுகங்களை கட்டி கொடுத்துள்ளது.
ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்தியா அதனை தாக்கலாம். இது சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கும். தற்போது அரபிக்கடலில் விமானம் தாங்கி போர் கப்பலை நம் நாடு நிலை நிறுத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்துக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் சீனா ஏற்கனவே பிஎல் -15 ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் சீனாவின் ஆதரவு என்பது பாகிஸ்தானுக்கு தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் நாட்டின் பெயர் துருக்கி. இஸ்லாமிய நாடான துருக்கி காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் பாகிஸ்தான் பக்கமே இருந்துள்ளது. காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்பது தான் துருக்கியின் நிலைப்பாடாக உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானுடன் பாதுகாப்பு துறை சார்ந்த உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது துருக்கி. மறுபுறம் துருக்கிற்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவு என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சிறப்பானதாக இல்லை. இதுதவிர சமீபத்தில் துருக்கி நாட்டின் 6 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியது. இந்த விமானங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை துருக்கி மறுத்து இருந்தது. இருப்பினும் கூட துருக்கி எப்போதும் பாகிஸ்தானின் பக்கம் தான். இதனால் போர் வெடித்தால் நம் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களை கூட பாகிஸ்தானுக்கு துருக்கி வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 3வது இடத்தில் இருக்கும் நாட்டின் பெயர் அஜர்பைஜான். இதுவும் ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்கு வசிக்கும் மக்களில் 97 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். அஜர்பைஜானும், துருக்கியும் நெருங்கிய நட்பு நாடுகள். கடந்த 2020ம் ஆண்டில் நாகோர்னோ - கரரபாக் போரின்போது துருக்கி, அஜர்பைஜானுக்கு உதவி செய்தது. அதேபோல் பாகிஸ்தானும் அஜர்பைஜானின் பக்கம் தான் நின்றது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையே ராணுவ ஒத்துழைப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவுடன் போர் ஏற்படும்போது அஜர்பைஜான் கண்ணை மூடிக்கொண்டு பாகிஸ்தானை தூக்கிப்பிடிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால் சீனாவின் நவீன போர் விமானங்கள் போர் ஆயுதங்கள் உள்ளன. அதேபோல் துருக்கி ட்ரோன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இதனால் இருநாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள், போர் விமானங்களை வழங்கலாம் என்பது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications