அமெரிக்காவுக்கு ஏன் நன்றி சொல்லணும்? டிரம்பை மதிக்காத ஜெய்சங்கர்.. அதிரடி பதில்
பெர்லின்: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி சொல்வீர்களா? என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு மோதல் முடிவுக்கு வருவதற்கு இந்திய ராணுவம் தான் காரணம். நன்றியை இந்திய ராணுவத்துக்கு தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளதன் மூலம் டிரம்பின் பொய்யை மீண்டும் முறியடித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்க தான் நிறுத்தியது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை நம் நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடு என்பது இல்லை.

போர் நிறுத்தம் என்பது இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்று நம் வெளியுறவுத்துறை பலமுறை கூறிவிட்டது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ, ‛‛இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய போர் வெடிக்க இருந்தது. அணுஆயுத போராக கூட இது வர வாய்ப்பிருந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தான் பேசி போரை நிறுத்தினார்'' என்று மார்த்தட்டி வருகிறது. இதுவரை 7 முறைக்கு அதிகமாக இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாங்கள் தான் என்று டிரம்ப் பேசிவிட்டார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று நம் நாட்டின் வெளியுறவுறத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் விடவில்லை. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போரை நிறுத்தியது நான் தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் நாளிதழான Frankfurter Allgemeine Zeitung என்பதற்கு ஜெய்சங்கர் பேட்டியளித்தார். அப்போது ஜெய்சங்கரிடம், ‛‛இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு (டொனால்ட் டிரம்ப்) நன்றி சொல்வீர்களா? சொல்ல வேண்டுமா?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜெய்சங்கர், ‛‛இருதரப்பு மோதல் என்பது ராணுவ தளபதிகளுக்கு இடையே நடந்த நேரடி தொடர்பு மூலம் முடிவுக்கு வந்தது. சண்டை முடிவுக்கு வந்த நாளின் காலையில் நாங்கள் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களை தாக்கினோம்.
அதேபோல் வான் பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க செய்தோம். எனவே, போர் நிறுத்தத்திற்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? . இந்திய இராணுவத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால் இந்திய இராணுவ நடவடிக்கை தான் பாகிஸ்தானை பணிய வைத்து மோதலை நிறுத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்க வைத்தது'' என்றார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் கூறியதை மீண்டும் ஜெய்சங்கர் புறம்தள்ளியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications