For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவை தோற்கடிக்க விரும்பும் மேற்குலக நாடுகள்.. ‛முடிந்தால் செய்யட்டும்’ விளாடிமிர் புதின் சூளுரை

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்பும் நிலையில் அதற்கான நடவடிக்கையில் முயற்சித்து பார்க்கட்டும் என விளாடிமிர் புதின் பரபரப்பாக பேசியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுக்க துவங்கியது. இந்த போர் 4 மாதம் ஆனபோதிலும் முடிவுக்கு வரவில்லை.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை கைவிட வேண்டும் என ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு! ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி! உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு! ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி!

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி

ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை கண்டுக்கொள்ளாமல் போரை துவங்கி செயல்படுத்தி வருகிறார். உக்ரைன் நாட்டின் ஒவ்வொரு நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் செயல்பாட்டை தடுக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதேநேரத்தில் உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுத உதவி செய்து வருகின்றன. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கோபப்படுத்தி உள்ளது.

பின்வாங்காத புதின்

பின்வாங்காத புதின்

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனை முழுமையாக பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் விளாடிமிர் புதின் செயல்பட்டு வருகிறார். இதற்கு இன்னும் சிறிது காலம் எடுத்தாலும் கூட போரில் இருந்து பின்வாங்க வேண்டாம் என விளாடிமிர் புதின் முடிவு செய்துள்ளார்.

முடிந்தால் முயற்சிக்கட்டும்

முடிந்தால் முயற்சிக்கட்டும்

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ஆலோசனை ஒன்று நடத்தினார். அதில், அவர் பேசினார். அப்போது அவர், ‛‛உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் செயல்படுகின்றன. இதனை செய்ய முடிந்தால் முயற்சித்து பார்க்கலாம். இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் என்ன கூற விரும்புகிறது?.

Recommended Video

    Agnipath திட்டத்தால் Ban ஆன 35 WhatsApp Groups! Dogecoin-க்கு Elon ஆதரவு! | *BitsandBytes
    கடினமானதாக இருக்கும்

    கடினமானதாக இருக்கும்

    கடைசி உக்ரைனியர் இருக்கும்வரை மேற்கத்தியநாடுகள் நம்முடன் சண்டையிட விரும்பலாம். இது உக்ரைனிய மக்களுக்கு மிகவும் சோகமானது. இந்த போர் அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மறுக்கவில்லை. ஆனால் இதில் மறுப்பு தெரிவிக்கும் நபர்கள் எங்களுடன் சமாதானம் ஆவது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் சண்டை நீண்டுகொண்டே சென்றால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே செல்லும்'' என்றார்.

    English summary
    Vladimir Putin has said sensationally that the"Today we hear that they want to defeat us on the battlefield. Well, what can you say here? Let them try".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X