25ம் தேதி துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நடக்கும் ரத்ததான முகாம்
துபாய் : இந்திய சுதந்திர தினத்தையொட்டி துபாய் ஈமான் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் வரும் 25.08.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

துபாய் ரீப் மால் எதிரில் அமைந்துள்ள அஸ்கான் ஹவுசில் ரத்ததான முகாம் நடைபெறும். துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முதுவை ஹிதாயத் : 050 5196433
ஹமீது யாசின் : 052 777 8341
ஜமால் முஹைதீன் : 055 800 7909
அமீரகத்தில் விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரத்தத்தின் தேவை அவசியமாக இருந்து வருகிறது. எனவே உயிர் காக்கும் ரத்ததானத்தை செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications