மொத்தமாக முடியும் கதை.. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் வார்னிங்! இதை செய்யலானா தப்பிக்க முடியாது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. இதை உடனடியாக சரி செய்யவில்லை எனில், பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. ஊழலை ஒழிப்பது, விரைவான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என ஐஎம்எஃப் கூறியிருக்கிறது.
பாகிஸ்தானில் நிலவும் நிர்வாக பிரச்சனை மற்றும் ஊழல் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை ஐஎம்எஃப் தயாரித்திருக்கிறது. இந்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஊழல்
வறுமை அதிகம் கொண்ட நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எனவே நாட்டின் வளர்ச்சிக்காக ஐஎம்எஃப் கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த உதவியை பெற வேண்டும் எனில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் ஒழிப்பு சாத்தியப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை பாகிஸ்தான் எந்த அளவுக்கு சிறப்பாக கடைபிடித்திருக்கிறது? என்பது குறித்து ஐஎம்எஃப் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலவீனமான பாகிஸ்தான்
பட்ஜெட் தயாரிப்பு, நிதி அறிக்கையை சமர்பிப்பது, கொள்முதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மேற்பார்வை செய்வது என அனைத்திலும் ஊழல் அதிகரித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட அனைத்திலும் பாகிஸ்தான் அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. சாதாரண மக்களின் அடிப்படையை தேவையை நிறைவேற்ற கூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். அரசியல் தளத்திலும், பொருளாதாரத்திலும் செல்வாக்கு கொண்ட எலைட் வகுப்பினர், அரசு வகுக்கும் பொது கொள்கையை தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்கின்றனர். பாகிஸ்தானின் பலவீனமான நிதி துறையும் இந்த ஊழலுக்கு துணையாக இருக்கிறது.
ஐஎம்எஃப் கட்டுப்பாடுகள்
இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனில் இன்று தொடங்கி அடுத்த 3-6 மாதங்களுக்குள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இது நாட்டின் ஜிடிபியை 5-6.5% வரை உயர்த்ததும். இதெல்லாம் செய்தால் பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட நிதி உதவியை வழங்க முடியும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அவசியமானவை. ஆனால் இந்த நிறுவனங்களில் உள்ள ஊழல்கள் காரணமாக ஐஎம்எஃப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
வெளிநாட்டு முதலீடுகள்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் அரசு, சிறப்பு முதலீட்டு கவுன்சில் எனும் அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க உதவும். உதாரணமாக பாக். ஐடி துறையில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்கிறது எனில், அந்நிறுவனத்திடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை விதிக்காமல், தொழில் தொடங்கினால் போதும் என்கிற நிலையில் அழைப்பு விடுப்பது, தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வது போன்றவற்றை கவுன்சில் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த கவுன்சிலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஐஎம்எஃப் கருதுகிறது. எனவே இந்த பிரச்சனையெல்லாம் சரி செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், ரூ.10,644 கோடி நிதியை ஐஎம்எஃப் விடுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications