இம்ரானுக்கு தெரிஞ்சது செக்ஸும் தவறான உறவும் மட்டும்தான்.. மாஜி மனைவி தாக்கு!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு தெரிந்ததெல்லாம் செக்ஸ் மற்றும் தவறான உறவுதான் என அவரது முன்னாள் மனைவி விளாசியுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு தெரிந்ததெல்லாம் செக்ஸ் மற்றும் தவறான உறவுதான் என அவரது முன்னாள் மனைவி விளாசியுள்ளார்.
பாகிஸ்தானி பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், தனியாக அரசியல் கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார். அதில், ஜெமிமா கோல்ட்ஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை டைவர்ஸ் செய்துவிட்ட இம்ரான் கான், சமீபத்தில் புஷ்ரா மனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்

இம்ரான்கான் கட்சி போட்டி
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இம்ரான் கானின் கட்சியும் போட்டியிடுகிறது. இதில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

10 மாத திருமண வாழ்க்கை
இந்நிலையில் அவரது முன்னாள் மனைவி ரெஹம் கான் இம்ரான் கான் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது சுயசரிதை புத்தகத்தில் வெளியிட்டு உள்ளார். லண்டனில் அமேசான் வழியாக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் இம்ரான் கான் உடனான தனது 10 மாத திருமண வாழ்க்கை பற்றி ரெஹம் கான் பல்வேறு தகவல்களை கூறி உள்ளார்.

பெண்களை மதிக்க தெரியாதவர்
அதில், இம்ரான் கான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், குடும்ப வாழ்க்கையின் விதிமுறைகள் புரியாத நபர், பெண்களை மதிக்க தெரியாதவர் என விளாசி எடுத்திருக்கிறார்.

தெரிந்தது எல்லாம் செக்ஸ்
இம்ரான்கானுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ், போதை மருந்து பழக்கம், நடனம் ஆடுவது மட்டும்தான். முறைகேடான செக்ஸ் உறவில் அதிகம் விருப்பம் கொண்டவர் இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

பராமரிக்க தெரியாதவர்
அதுமட்டுமின்றி குடும்பத்தையே பராமரிக்க தெரியாத இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கிய போது நான் சில ஆலோசனைகள் தந்து உதவினேன். பல தனிப்பட்ட வழக்குகளையும் சந்திக்க நேரிட்டது.

முறைகேடான வழியில் குழந்தைகள்
முறையாக திருமணம் செய்யும் முன்பாகவே முறைகேடான வழியில் இம்ரான் கானுக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் ரெஹம் கான் கூறியுள்ளார். இதை இம்ரான் கானே ஒப்புக் கொண்டுள்ளார்.

முறைகேடான உறவு
அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த பெண்களில் சிலர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தகம் பேசப்பட்டு
இம்ரான் கானின் கடந்த காலத்தை அதிகம் கிளறி எழுதப்பட்டுள்ளதால், ரெஹம் கான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்திற்கு, பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இம்ராம்கான் குறித்த இந்த புத்தகம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications