பெரும் குழப்பத்தில் இம்ரான் கான்! சொந்த கட்சி டூ ராணுவம் வரை.. அனைவரும் எதிராக திரும்பியதால் சிக்கல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பாகிஸ்தான் பிரதமராக முதலில் இம்ரான் கான் பொறுப்பு ஏற்ற போது, பாகிஸ்தான் அவர் மீட்டெடுப்பார் என்றே பலரும் நம்பினர்.
இருப்பினும், அவரால் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இம்ரான் கானுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விரைவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி உட்கட்சியிலும் பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதால் ஆட்சியைத் தக்க வைப்பதே பெரிய சிக்கல் மிகுந்ததாக மாறி உள்ளது. அதற்கிடையே இம்ரான் கானுக்கு மற்றொரு பின்னடைவாகச் சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் திடீரென மயமாகினர். இது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னடைவு
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் ராஜினாமா செய்யலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், இத்தகவலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், இம்ரான் கான் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜம்ஹூரி வதன் கட்சியின் (ஜேடபிள்யூபி) தலைவர் ஷாஜேன் புக்டி அறிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ளதாகவும் ஷாஜேன் புக்டி அறிவித்துள்ளார். முன்னதாக மதநல்லிணக்கம் விவகாரத்தில் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பொறுப்பில் இருந்தும் ஷாஜேன் புக்டி ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய சிக்கல்
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என புக்டி அறிவித்துள்ளார். இம்ரான் கானுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாளை (மார்ச் 28) எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தைக் கடந்த மார்ச் 8ஆம் தேதி பாகிஸ்தான் மக்கள் கட்சி அளித்திருந்தது. அதன் பின்னர், இம்ரான் கான் கூட்டணியில் உள்ள கட்சிகளும் சரி, அவரது கட்சி உறுப்பினர்களும் சரி பலரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாகத் திரும்பி உள்ளனர். இதனால் ஆட்சியைத் தக்க வைப்பதில் இம்ரான் கானுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொந்த கட்சிக்கு எதிர்ப்பு
சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே பலரும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எளிதில் வெற்றி பெறும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம் ஆட்சியைத் தக்க வைக்கக் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இம்ரான் கான் அரசில் கூட்டணி வகிக்கும் 3 பிரதான எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருவது இம்ரான் கானுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இன்றைய தினம் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வரும் முன்னரே, பிரதமர் இம்ரான் கான் பதவி விலகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறலாம்.

ராணுவம்
இம்ரான் கான் தனது கடைசி முயற்சியாக பாக். நாட்டின் அதிகாரமாக்கப் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் உடன் பேசினார். இருப்பினும், பாக். ராணுவமும் கூட இம்ரான் கான் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், அவர்கள் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இதனால் இம்ரான் கான் பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications