ஊசி மூலம் குழந்தையைக் கொல்ல முயன்ற சீனத் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை
பெய்ஜிங்: தனது மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் தனது இரண்டு மாதக் குழந்தையைக் கொல்ல முயன்ற கொடூரத் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.
சீனாவைச் சேர்ந்த யின் ஜிய்கி என்ற நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மனைவி பிரசவித்த அவர்களது இரண்டு மாதக் குழந்தை தன்னுடையது அல்ல என யின் கருதியுள்ளார். எனவே, அக்குழந்தையைக் கொல்வது என அவர் தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அக்குழந்தையின் உடலில் ஒரு ஊசியைச் சொருகி உள்ளார். இதனால் குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. கணவரின் சதிச் செயலை அறியாத அவரின் மனைவி, உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப் பட்டுள்ளது. பின்னர் குழந்தை ஆரோக்கியமாக வீட்டிற்குத் திரும்பியுள்ளது. ஆனபோதும், மனைவி மீது கொண்ட சந்தேகம் மாறாத யின், மீண்டும் தனக்குக் கிடைத்தச் சந்தர்ப்பத்தில் குழந்தையின் உடலில் மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 ஊசிகளைக் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அக்குழந்தைக்கு தகுந்த அறுவைச் சிகிச்சைகள் செய்யப் பட்ட போதும், ஊசிகள் ஆழமாக பாய்ந்திருப்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து கைது செய்யப் பட்ட யின், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் யின்னுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குழந்தைக்கு நடத்தப் பட்ட டி.என்.ஏ சோதனையில் குழந்தையின் தந்தை யின் தான் என்பது நிரூபிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications