For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிப்படைவாதிகள் கட்டுப்பாடு தளர்கிறது.. பாகிஸ்தான் டிவியில் பாலியல் நிகழ்ச்சி ஒளிபரப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் சந்தேகங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் டிவி நிகழ்ச்சி எதிர்ப்பு இன்றி ஒளிபரப்பப்பட்டு வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ஒளிபரப்பாகும் ஹெச்.டிவி என்ற தொலைக்காட்சியில், நம்மூர் மாத்ருபூதம் போல நதிம் உத்தின் சித்திக் என்ற டாக்டர் பாலியல் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டுள்ளார். இதுபோன்ற விஷயங்களை பேசுவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருத்து பாகிஸ்தானை பொறுத்தளவில் உடைபட்டுள்ளது.

இதுகுறித்து நதிம் உத்தின் சித்திக் கூறுகையில், "எனது நிகழ்ச்சி பாலியல் தொடர்பானதாக இருந்தாலும் கண்ணியத்தோடு நடத்தி வருகிறேன். நிகழ்ச்சி பற்றி சர்ச்சை வெடித்துவிட கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். பாலியல் நோய்களும், அதை தவிர்க்கும் வழியையும்தான் நான் கற்றுத் தருகிறேன். எனவே முஸ்லிம் மத தலைவர்களும் இதை வரவேற்கவே செய்கின்றனர் என்றார்.

டிவியின் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரார் அனொஷே கூறுகையில், "முன்பெல்லாம் மார்பக புற்றுநோய் குறித்து பேசக்கூடாது என்று மத தலைவர்கள் கூறிவிடுவார்கள். ஏனெனில் அதில் மார்பு என்ற வார்த்தை வருகிறது. ஆனால் இப்போது நிலை மாறியுள்ளது" என்றார்.

இந்த டிவியில் ஒளிபரப்பான கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வந்திருந்த இஸ்லாமிய மத தலைவர் சாகித் மதானி கூறுகையில் "தாய்க்கு ஆபத்து ஏற்படும்போது கருக்கலைப்பு செய்துகொள்ள இஸ்லாமிய சட்டம் இடம் தருகிறது. தேவைக்கு ஏற்ப சட்டத்தை வளைப்பதில் தவறில்லை" என்றார். பாகிஸ்தானில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி உள்ளபோதிலும், அவ்வப்போது அதுகுறித்த சர்ச்சை வெடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Muslim Pakistan, a new TV show is trying to deal with the delicate subject of sex and embarrassing illnesses without angering conservatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X