ரஷ்யாவில் இந்திய வீரர்கள் பங்கேற்ற.. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை! ஃபுல் டென்ஷனில் அமெரிக்கா
மாஸ்கோ: ரஷ்யா-பெலாரஸ் நடத்திய 'ஸாபாட் 2025' எனும் ராணுவப் பயிற்சிக்கு இந்தியா, 65 வீரர்களை அனுப்பியிருந்தது. இந்த சம்பவம் மேற்கத்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகைகள் அடங்கிய இந்தப் பயிற்சி, நேட்டோ நாடுகளுக்கு அருகில் நடத்தப்பட்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது.
'ஸாபாட் 2025' என்பது ரஷ்யாவும், பெலாரசும் சேர்ந்து நடத்திய போர் பயிற்சியாகும். இந்த பயிற்சியில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி, வங்கதேசம், நைஜர், ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றிருந்தனர். இந்தியா சார்பில் 65 வீரர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச ஊடகங்களின் ராணுவ ஆய்வாளர்கள், இந்தப் பயிற்சி போலந்திலிருந்து தொடங்கி, ஐரோப்பாவின் பிற நாடுகளையும் அச்சுறுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆனால், நமது பங்களிப்பு நமக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஏனெனில் நமக்கு இப்போது வரை பல முக்கியமான ராணுவ ஆயுதங்களை ரஷ்யாதான் கொடுத்து வருகிறது. எனவே ரஷ்யாவுடன் ஒத்துழைப்பது முக்கியம்.
இந்த ஒத்துழைப்புகள் இருந்தாலும், மறுபுறம் நேட்டோ இந்த விஷயத்தை கவலையுடன் அணுகுகிறது. நேட்டோவின் கவலைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தினார். "இந்தியாவுடனான உறவு வர்த்தக ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பது, ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பது, எண்ணெய் கொள்முதல்... இவை நமது ஒத்துழைப்புக்குத் தடைகளாக உள்ளன" என்று கூறியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற முதல் ரஷ்ய-பெலாரஸ் பயிற்சி இது என்பதால், அமெரிக்கா தனது ராணுவப் பிரதிநிதிகளை இந்தப் போர்ப்பயிற்சியைக் கண்காணிக்க அனுப்பியுள்ளது. இந்த போர் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு, மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகளை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளது.
ரஷ்யாவுடனான ஒத்துழைப்புக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா மீது 50% அளவுக்கு வரியை விதித்தது. இருப்பினும் இந்தியா அசைந்து கொடுக்கவில்லை. என்னதான் வரி இருந்தாலும், ஆசியாவில் சீனாவை சமாளிக்க ஒரு உறுதியான கூட்டாளி அமெரிக்காவுக்கு தேவை. எனவே இந்தியாவை அமெரிக்கா விட்டுக்கொடுக்காது. இதை உறுதி செய்யும் வகையில், நேற்று பிரதமர் மோடியின் பிறந்த தினத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இப்படியாக இந்தியா-அமெரிக்க மோதல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஸாபாட் போர் பயிற்சி மூலம், இந்த உறவு புதுப்பித்தல் முயற்சியை மீண்டும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
-
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா.. ரஷ்யாவுடன் அவசர டீலிங்.. திடீர்ன்னு என்ன ஆனது? -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications