Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இன்று வர்த்தக ஒப்பந்தம்.. இந்தியாவிற்கு என்னென்ன சிறப்பு நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆவதால், அமெரிக்கா உடனான வர்த்த வரி பாதிப்பை ஓரளவு சரி செய்ய முடியும். இதில் தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகள் இடம்பெறுகிறது. இது இந்தியாவிற்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா நேற்று 77-வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார். அவர் குடியரசு தின விழாவிற்காக மட்டுமின்றி, வர்த்த ஒப்பந்தத்திற்காகவும் இந்தியா வந்துள்ளார். அதன்படி இன்று இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

india eu trade deal agreement today What are the special benefits for India

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டுவிட்டநிலையில் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இறுதியாகி உள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, ஜவுளி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகள் இடம்பெறுகிறது. இவை இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. எனினும், துணி, தோல் பொருட்கள், ஆடைகள், வைர நகை, கைவினைப் பொருட்கள் போன்ற தொழிலாளர் அதிகம் சார்ந்த துறைகளுக்கு பூஜ்ய சுங்க வரியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது.

இதுதான் இந்தியா இதுவரை கேட்ட முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீகரம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களிலும் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. ஐரோப்பா ஒன்றியம் ஏற்றுக்கொண்டால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இந்தியாவில் அதிகரிக்கும். அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம், தனது வாகனங்கள் மற்றும் மது வகைகள் மீதான சுங்க வரி குறைப்புகளை கோரியிருக்கிறது.

இந்தியாவில், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கான சராசரி வரி 9.3 சதவீதமாக இருக்கும் நிலையில், வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் 35.5 சதவீதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐரோப்பிய மதுபானங்களுக்கு 100 முதல் 125 சதவீதம் வரை சுங்க வரி விதிக்ப்பட்டுகிறது. எனவே அதனை குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய மாட்டிறைச்சி, சர்க்கரை, அரிசி சந்தைகளை பாதுகாத்து வருகிறது. இந்தியாவும் தனது வேளாண்மை மற்றும் பால் உற்பத்தித் துறைகளை பாதுகாத்திருக்கிறது. இதனால் விவசாய விவகாரங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில் இருதரப்பும் தங்களுடைய பொருட்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் சுங்க வரிகளை தளர்த்துவார்கள்.

2024-25 காலத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தகம் ரூ.12.29 லட்சம் கோடி இதில் ஏற்றுமதி ரூ.6.83 லட்சம் கோடி மற்றும் இறக்குமதி ரூ.5.46 லட்சம் கோடியாகும் இருந்தது.


இந்தியாவிற்கு நன்மைகள்

ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் வரிச் சலுகை

இந்தியாவின் உழைப்புச் சார்ந்த துறைகளான ஜவுளி , காலணிகள் (Footwear), தோல் பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்கள்/ஆபரணங்கள் போன்றவற்றுக்கு ஐரோப்பியச் சந்தையில் வரி இல்லாத அல்லது மிகக் குறைந்த வரி வசூலிக்கப்படும். இதனால் வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மை அதிகரித்து, ஏற்றுமதி வருவாய் கணிசமாக உயரும்.

தொழில்துறைக்கான உள்ளீட்டுச் செலவுகள் குறைதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்நிலை இயந்திரங்கள், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் வேதிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறையும். இது இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையைக் குறைத்து, உற்பத்தியை லாபகரமானதாக மாற்றும். குறிப்பாக, ஐரோப்பிய கார் இறக்குமதி மீதான வரி (110% இலிருந்து 40% ஆக) குறைக்கப்படுவது பெரும் பயனளிக்கும்.

முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்ய பாதுகாப்பான சூழலை உருவாக்கும். இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் , மருந்துகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் புதிய ஆலைகள் உருவாகும். இது இந்திய இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, "Make in India" திட்டத்திற்குப் பெரும் வலுசேர்க்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+