US Iran Attack: ஈரானை தாக்கிய இஸ்ரேல்.. தொடர் பதற்றம்! இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்க.. வெளியுறவு அமைச்சகம் அலர்ட்
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

இஸ்ரேல் ஈரான் மோதல்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் யூத நாடாக உள்ளது. இஸ்ரேலை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாகும். இதனால் காலஸ்தீனம் காசா பிரச்சினையால் ஹமாஸ் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் தாக்கி அழித்தது. இன்னொரு அண்டை நாடான லெபனானில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ், லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகள் ஈரானுக்கு ஆதரவு என்பதால் தான் இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் உருவானது. கடந்த ஆண்டு கூட காசா போரை கண்டித்து ஈரான் - இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அப்போது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதேபோன்று ஈரான் அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்த வேண்டும் இல்லையெனில் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இது தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் செய்ய 3 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகளும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் இன்று திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவும் ஈரானை சுற்றி போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து இருந்த நிலையில் இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதலை தொடங்கியது. தலைநகரை சுற்றி டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் என 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையத்து தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை தொடங்க ஆரம்பித்துள்ளது. ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி அனுப்பியுள்ளது.
இரு நாட்களுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம், X தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அவசர உதவி எண்கள்
"இந்திய மக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளின் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பிற்காக குறிப்பிடப்பட்டுள்ள தங்குமிடங்களுக்கு அருகில் இருங்கள். குடியிருப்பு அல்லது அலுவலகங்களுக்கு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களை தெரிந்துகொள்ளவும்.. மேலும் அறிவிப்பு வரும்வரை அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உதவி தேவைப்படும் இந்திய குடிமக்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது. தூதரகம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. தேவைக்கேற்ப புதிய தகவல்களை வெளியிடுவோம்"
செல்போன் எண்: +972-54-7520711; +972-54-2428378
E-mail: [email protected]" என்று தெரிவித்துள்ளது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications