வாங்குனது பத்தல போல..ஒரே பட்டனில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்த இந்தியா! பஞ்சாப் பார்டரில் மர்ம பொருள்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது செவ்வாய் கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இந்தியாவின் பதினைந்து முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழித்தொழிக்க, இந்திய பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பெரிய பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இதில் ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர்-எ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

அந்த இடங்களில் பஹவல்பூர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் முகாம், முரிட்கேவில் லஷ்கர் முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. உளவுத்துறை தகவல்கள்படி, இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் மூலம் பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் அடிப்படை தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் நடவடிக்கை முழுக்க முழுக்க தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்டது என இந்தியா கூறி இருந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இரவு மற்றும் இன்று அதிகாலை இந்திய ராணுவ மையங்களை இலக்காகக் கொண்டு 15 நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், இதில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் அடங்கும். ஆனால் இந்த தாக்குதல்களை இந்தியா முறியடித்தது என மத்திய அரசு வியாழக்கிழமை கூறியுள்ளாது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானின் லாஹூர் உட்பட பல இடங்களில், பாக் விமானப்படை பாதுகாப்பு ரடார்கள் மற்றும் கணினி அமைப்புகளை குறிவைத்து அழித்தது. பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்திய நிலையில், அவற்றை இந்திய விமான பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாக் வான் அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க இந்தியா ஹார்பி ட்ரோன்களை பயன்படுத்தியது.
பின்பு இந்தியா, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பின் மூலம் இந்திய நகரங்களை நோக்கி வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. தற்போது, அழிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் சிதைவுகள் சேகரிக்கப்பட்டு வரும், நிலையில், இந்தியாவை இலக்கு வைத்து எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் ஆதாரங்களாக இவை சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் பட்டாலா சாலையில் உள்ள ஜதுவால் என்ற கிராமத்தில் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற பிஎல் 15இ ஏவுகணை இது என தெரியவந்துள்ளது. இது பாகிஸ்தானின் விமானங்களில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா நோக்கி வந்த அவற்றை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்த நிலையில் தற்போது அதனை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications