கெஞ்சிய பாகிஸ்தான்! 3.35க்கு வந்த போன்! முப்படை தாக்குதலை நிறுத்த கோரிக்கை! விக்ரம் சொன்ன தகவல்!
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சனிக்கிழமை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. இன்று மாலை 3.35 மணிக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும் கடல் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நிறுத்தக் கூறியதாகவும், இதை எடுத்து 5 மணி முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தியது. தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாக்., இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக இந்திய எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப் வரையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கியது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்தார். போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேசிய நிலையில் இரு நாடுகளும் உடனடியான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார். மேலும் பாகிஸ்தான் துணை பிரதமரும் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா தரப்பில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மத்திய வெளியுறத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குனர் டிஜிஎம்ஓ இன்று பிற்பகல் 35 மணிக்கு இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் (டிஜிஎம்ஓ) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர்களை அழைத்து பேசியதாகவும், இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் தரை மற்றும் வான் மற்றும் கடல் வழி தாக்குதல்களை நிறுத்துவது என்றும் துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது என இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மே மாதம் 12ஆம் தேதி 12 மணி நேரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" எனவும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானே இறங்கி வந்து தாக்குதலை நிறுத்துக் கொள்வது என கேட்டுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications