சமையல்கார பெண்ணை துன்புறுத்தியதாக புகார்: இந்திய தூதரை வெளியேற்றிய நியூசிலாந்து அரசு
வெல்லிங்டன்: வீட்டு சமையல்காரரை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து நியூசிலாந்துக்கான இந்திய தூதரையும், அவரது மனைவியையும் நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தபாரின் மனைவி அங்கு தனது வீட்டில் பணியாற்றிய சமையல்கார பெண்மணியை அடித்து நபரை துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியத் தூதர் ரவி தபார் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். இதனை வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது. "இந்திய தூதருக்கு தனிப்பட்ட முறையில் அவரே முன்வந்து அந்நாட்டிலிருந்து வெளியேற அதிகாரம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கான இந்திய தூதர் ரவி தபார். ரவி தபாரும் அவரது மனைவியும் தங்கள் வீட்டு சமையல்காரராக இருந்தவரை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். வெல்லிங்டனில் உள்ள தூதரக அதிகாரியின் இல்லத்தில் இருந்து வெளியேறிய சமையல்காரர் சுமார் 20 கி.மீ., வரை நடந்து சென்றுள்ளார். மிகவும் பதற்றம் நிறைந்த வெல்லிங்டன் நகரில் எங்கு செல்வதென தெரியாமல் அவர் சுற்றி திரிந்தாக கூறப்படுகிறது. வெலிங்டன் நகர போலீசார் அவரை அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இதனை அடுத்து அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இந்தியத் தூதர் ரவி தபார் மனைவி ஷர்மிளா இவரை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்துக்கு நடந்த வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்தார்.
ஷர்மிளா தன்னை கொத்தடிமையாக வைத்து அடித்து துன்புறுத்தியதாக வெலிங்டன் போலீஸிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்மணி கடந்த மே மாதம் இந்தியா திரும்பிவிட்டதாகவும் வெலிங்டன் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரவி மீதான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததை அடுத்து, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ரவி தபார் மற்றும் அவரது மனைவியிடம் பேட்டி எடுப்பதற்கு அனுமதி அளிக்க போலீசார் அனுமதி அளிக்க மறுத்து வருவதாக நியூசிலாந்து ரேடியோ இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம், ரவி நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக போலீசார் தெரிவித்ததாகவும், அந்த இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நியூசிலாந்து வெளியுறவு விவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications