தேவையில்லாம பேசுறீங்க.. இந்தியாவின் கருத்தால் டென்ஷன் ஆன வங்க தேசம்? என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தின் நிறுவனரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரகுமான் வீடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. இதற்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது. இந்தியா தேவையின்றி பேசுவதாகவும் விமர்சித்துள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த 5 ஆம் தேதி வங்கதேசத்தில் அவரது கட்சியினரின் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசினார். அப்போது, ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச நிறுவனருமான ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லத்தை வன்முறையாளர்கள் சூறையாடினர். இது தொடர்பாக இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

bangladesh sheikh hasina india

இதற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஜிபூர் ரகுமான் இல்லம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக தனது அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்திய நிலையில், இது குறித்து ரியாக்ட் செய்துள்ள வங்கதேசம், இந்தியாவின் கருத்து தேவையற்றது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-

இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த 6 ஆம் தேதி வெளியிட்ட கருத்து வங்கதேச அரசின் இடைக்கால அரசின் கவனத்திற்கு வந்தது.வங்கதேசத்தின் உள்விவகாரங்களில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து கூறியிருப்பது எதிபார்க்காதது மற்றும் தேவையற்றது. வங்கதேசம் எந்த ஒரு நாட்டின் உள் விவகாரங்களிலும் அதிகாரப்பூர்வமாக தலையிடுவது இல்லை. இதே நிலைப்பாட்டைத்தான் பிற நாடுகளிடமும் எதிர்பார்க்கிறது" என்று கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்பாக இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் தனது எதிர்ப்பை வங்கதேசம் பகிர்ந்துள்ளது.

வங்கதேசத்தில் நீடிக்கும் பதற்றம்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு கொள்கை தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மானவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்ததால், கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இது குறித்து இந்தியா அவரை இதுவரை நாடு கடத்தும் முடிவை எடுக்கவில்லை.

இத்தகைய சூழலில் தான், கடந்த வாரம் ஷேக் ஹசீனா, தனது கட்சியின் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் காணொலி வாயிலக உரையாற்றினார். அதில் தற்போது வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியதாக தகவல் பரவியது. அவர் ஒருபக்கம் உரையாற்றும் போதே, வங்கதேச நிறுவனரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

அவரது வீட்டை தீ வைத்தும் எரித்தனர். வன்முறையாளர்கள் முஜிபுர் ரகுமான் வீடு சூறையாடப்பட்டது தொடர்பாக இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்தியா கூறுகையில், முஜிபுர் ரகுமானின் வரலாற்று நினைவு இல்லம் சூறையாடப்பட்டது வன்முறை செயல் எனவும் கடுமையாக கண்டித்தக்கது என்றும் கூறியது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

ஷேக் முஜிபுர் ரகுமான் வரலாற்று இல்லம் தாக்கப்பட்டது வருத்தமளிக்க கூடியது. வங்கதேச சுதந்திர போராட்டத்தை மதிப்பவர்களும் வங்கதேசத்தின் அடையாளத்தை வளர்க்க நினைப்பவர்களும் அந்த இல்லத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்து இருக்கிறார்கள்" என்று கூறினார். இந்தியாவின் இந்த கருத்துதான் வங்கதேசத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே இந்தியாவை கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்பாக இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் தனது எதிர்ப்பை வங்கதேசம் பகிர்ந்துள்ளது மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+