வர்த்தகத்தை சொல்லி மிரட்டி பாகிஸ்தானுடனான மோதலை நிறுத்தவில்லை டிரம்ப்! இந்தியா திட்டவட்ட மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்படுவதை அமெரிக்கா தனது வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டி தடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை இணைந்து துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத மையங்களை அழித்தது.

இதற்கு பாகிஸ்தான் எதிர்மறையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்திய ராணுவம் அதை வெற்றிகரமாக தடுத்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு நாட்டு அதிகாரிகளும் கூறினர். ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான பதட்டங்களை நிறுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். "நாங்கள் ஒரு அணு ஆயுத போரைக் தடுத்தோம். அது மிக மோசமான அணு ஆயுத போராக முடிந்திருக்கலாம். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். அதைக் தடுக்க வழிவகுத்ததில் பெருமைப்படுகிறேன். போரை நிறுத்தவில்லை என்றால் இரு நாடுகளுடனான வர்த்தகம் நிறுத்தப்படும் என எச்சரித்ததால் இரு நாடுகளும் அமைதிக்கு வந்தன" என கூறினார்.

India Donald Trump Pakistan

இதனையடுத்து இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பின. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பு மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற தேசிய நிலைப்பாடு எங்களிடம் நீண்டகாலமாக உள்ளது. இது எப்போதும் மாறவில்லை. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி இருக்கிறது.

போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், வர்த்தக நடவடிக்கையை கை விடுவோம் என இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதாக கூறுவதில் உண்மை இல்லை.

மிஞ்சிய பிரச்சினை, பாகிஸ்தான் பிடித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தான் மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய நேரம் முதல், மே 10 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான உரையாடல்கள் நடந்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் தொடர்பான விவாதம் எதுவும் இடம் பெறவில்லை" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+