கூடங்குளத்தில் 5,6 வது அணு உலை அமைக்கப்படும்.. இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க இந்தியா -ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
செயின்ட்பீட்டர்ஸ் பர்க்: கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பது உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் கையெழுத்தானது.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி 4 நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருதரப்பு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதில் முக்கியமாக கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே அங்கு 2 அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன. 3, 4-வது அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
பின்னர் இருநாட்டு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதை தடுக்கும் விவகாரத்தில் அர்ப்பணிப்பை பகிர்ந்து உள்ளன என இருதரப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா, ரஷ்யா இடையே 70 ஆண்டுகளாக வலுவான உறவுகள் உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது விரிவடைந்து உள்ளது. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது பற்றி அதிபர் புதினுடன் ஆலோசனை செய்தேன். பாதுகாப்பு துறையில் இருதரப்பு உறவும் மிகவும் வலுவாகி உள்ளது. இரு நாடுகளிடேயே சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகள் தளர்த்தப்படும் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications