இந்தியாவின் எம்.ஐ - 35 ஹெலிகாப்டர்களை வைத்து தலிபான்களை வேட்டையாடப் போகும் ஆப்கானிஸ்தான்
காபுல்: இந்தியா வழங்கிய எம்.ஐ. 35 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டதால் விரைவில் அவை தலிபான்களுக்கு எதிரான வேட்டையில் ஈடுபடுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றாக இந்த ஹெலிகாப்டர் தானமும் அடக்கம். மொத்தம் 4 எம்.ஐ 35 ரக தாக்குதல் ஹெிகாப்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது இந்தியா.
இவற்றை உதிரி பாகங்களாகத்தான் இந்தியா கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் வைத்து இவை சேர்க்கப்பட்டு வருகின்றன. இதில் 3 ஹெலிகாப்டர்களை அசெம்பிள் செய்து தயார் நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர். இவை தாக்குதலுக்குத் தயாராக உள்ளனவாம்.

தாக்குதலில் இறங்க ஆயத்தம்
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக கொள்முதல் பிரிவு துணைத் தலைவர் குலாம் சாகி அகமதாசி கூறுகையில், இந்தியா எப்போதுமே எங்களுக்கு உதவி வருகிறது. இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை அசெம்பிள் செய்து தயார்படுத்தி விட்டோம். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அவை ஈடுபடுத்தப்படவுள்ளது என்றார்.

இந்தியாவுக்கு நன்றி
ஆப்கானிஸ்தான் விமானப்படை கமாண்டர் அப்துல் வகாப் வர்டாக் கூறுகையில், இந்தியாவின் உதவிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். எங்களது நாட்டில் அமைதி நில பிராந்திய மற்றும் உலக நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

ஆப்கானிஸ்தானுக்குப் பொருத்தமானது
மேலும் அவர் கூறுகையில், இந்திய ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தான் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாகும். இது எங்களது படையினருக்கு மேலும் ஊக்கம் தரும்.

உலகத்தின் எதிரி தலிபான்
தலிபான், தயீஷ், அல் கொய்தா போன்றவை எங்களுக்கு மட்டும் எதிரிகள் கிடையாது. உலகத்துக்கே அவை எதிரிகள் ஆகும். எனவே இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போரில் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.

ரஷ்ய நாட்டு ஹெலிகாப்டர்கள்
இந்தியா தானமாக வழங்கியுள்ள இந்த எம்ஐ 35 ஹெலிகாப்டரானது ரஷ்யத் தயாரிப்பாகும். கடந்த 1972 முதல் இந்த ஹெலிகாப்டர்கள் தாக்குதல் களத்தில் இருந்து வருகின்றன.

அதிரடி ஹெலிகாப்டர்
இந்த ஹெலிகாப்டர் பல்வேறு வசதி்களைக் கொண்ட மல்ட்டி பர்பஸ் ஹெலிகாப்டராகும். இதில் தாக்குதலுக்கான வசதிகள், 8 பேர் உட்கார்ந்து செல்வதற்கான வசதிகள், சரக்குளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகள் என பல உள்ளன. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications