இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.. கை கொடுக்கும் ஐரோப்பா! சீனா, பாகிஸ்தானுக்கு சிக்கல்!
ரோம்: ஐரோப்பிய நாடுகள் இணைந்து 'யூரோட்ரோன் புரோகிராம்'(Eurodrone program) எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் பங்கேற்க ஆசிய நாடுகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், இந்தியாவுக்கு திட்டத்தின் பார்வையாளராக ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தவரை அங்கு இருக்கும் நாடுகள் சிறியவை. எனவே தங்களுக்கு என தனியாக ராணுவத்தை உருவாக்குவதை விட, கூட்டு படையை உருவாக்கினால் அதில் லாபம் அதிகம் என்பதை உணர்ந்த அந்நாடுகள், கூட்டு சேர்ந்து ராணுவ பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் சேர்ந்து 'MALE' என்படும் நவீன ட்ரோனை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கான திட்டத்திற்கு 'யூரோட்ரோன் புரோகிராம்' என பெயரிடப்பட்டிருக்கிறது. உலகின் வலிமையான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்ய ராணுவத்தில் உள்ள ட்ரோன்களுக்கு இணையாக இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆளில்லாமல் கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன் சுமார் 13 கி.மீ உயரத்தில் பறக்கக்கூடியது. மீட்பு பணிகளுக்கும், தெரியாத நிலப்பரப்பை ஆய்வு செய்வதற்கும்தான் இது பயன்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கமே உளவு பார்ப்பதுதான்.
மட்டுமல்லாது இது நீர் மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்கவும், அதற்கு எதிரான தாக்குதலை நடத்தவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 2.3 டன் அளவுக்கு வெடிப்பொருட்களை கொண்டு செல்ல முடியும். அதே நேரம், 40 மணி நேரம் வரை இடை நிற்காமல் பறக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவின் MQ-9 Reaper எனும் ட்ரோன்தான் இருப்பதிலேயே சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு இணையான திறனை இந்த MALE ட்ரோன் வெளிப்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதை தயாரிப்பது உலகின் நெ.ஒன் விமானத்துறை நிறுவனமாக இருக்கும் ஏர்பஸ்தான் (Airbus). இதனுடன் பிரான்சின் பாதுகாப்பு தடவாளங்களை தயாரிக்கும் 'டசால்ட் ஏவியேஷன்'(Dassault Aviation), மற்றும் இத்தாலியின் பாதுகாப்பு தடவாளங்களை தயாரிக்கும் 'லியோனார்டோ' கூட்டு சேர்ந்துதான் MALE ட்ரோன் தயாரிக்கப்படுகிறது.
இதில் டசால்ட் ஏவியேஷன் என்கிற பெயரை எங்கோ கேள்விப்பட்டதாக தெரிகிறதா? ஆம் நாம் வாங்கிய ரஃபேல் விமானத்தை இந்த நிறுவனம்தான் செய்து கொடுத்தது.
ஆக பெரிய பெரிய கைகள் எல்லாம் இந்த ட்ரோன் தயாரிப்பில் களம் இறங்கி இருக்கின்றன. இது ஐரோப்பிய நாடுகளின் திட்டம் என்பதால், இந்தியாவால் இதில் பங்கேற்க முடியாது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் பார்வையாளராக இந்திய இருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பு இந்திய ராணுவ துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ட்ரோன் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து DRDO துறைக்கு மேலதிக ஐடியாக்கள் கிடைக்கும்.
தென்மேற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனை சமாளிக்க கூடுதலான ராணுவ பலம் நமக்கு தேவை. அந்த வகையில் தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இந்திய சிறப்பாக பயன்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications