For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதால் எந்த மாற்றமும் வராது...சிவசங்கர் மேனன் பேச்சு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதால் பாகிஸ்தானுடனான விவகாரத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்று சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறுவது குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவசங்கர் மேனன் பேசியதாவது:

பாகிஸ்தான் அரசியலமைப்பு, அது சார்ந்த நிறுவனங்கள் என எதுவுமே இந்தியாவுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ளும் அடிப்படையிலேயே இல்லை.

India should not worrying about seat on the UN body: Menon

மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் நீடித்து வரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் போதுமான ஆதரவு இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதமும் தொடர்ந்து வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராவது பற்றி இந்தியா கவலைப்படக் கூடாது. அது எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வராது.

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் இணக்கமான சூழ்நிலைகளை உருவாக்குவதுதான் தற்போது மிக முக்கியம்.

இவ்வாறு சிவசங்கர் மேனன் கூறினார்.

English summary
India should not spend its time worrying about a seat on the UN body sivashankara menon said while participating in Newyork programme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X