சத்தமே இல்லாமல் 'சரித்திரம்'.. இலங்கை- தமிழகம் இடையே தரைவழிப் பாலம் கட்டுவது குறித்து ஜரூர் ஆய்வு!
யாழ்ப்பாணம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் குறித்து கோபால் பாக்லே கூறியதாவது: இலங்கை- இந்தியா இடையேயான எரிபொருள் குழாய் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இலங்கையின் வடக்கு பகுதி வழியாக திருகோணமலையை சென்றடையும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் உள்ள படகு இறங்குதுறை பகுதிகளை ஆய்வு செய்தேன். தலைமன்னார்- தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை தொடங்குவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.
தலைமன்னார்- தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை கைவிடவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும்; இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கையின் அரசியல் சூழலில் தற்போது 13-வது திருத்த சட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்கிற நிலைமை உள்ளது. முந்தைய ராஜபக்சேக்கள் அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளரையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவால் மாற்ற முடியாத அரசியல் நிலைதான் இலங்கையில் உள்ளது. இவ்வாறு கோபால் பாக்லே கூறினார்.
அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய தமிழர் பகுதிகளில் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டார். நிர்மலா சீதாராமன் தமது பயணத்தை நிறைவு செய்த போது சீன தூதர் உள்ளிட்டோரும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சென்றனர். இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இது இந்தியாவின் தென் பகுதி பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications