இந்தியா எங்களை அடிச்சுப்புட்டாங்க.. அஜர்பைஜானில் குமுறிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகு: பஹல்காம் தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதனை காரணமாக வைத்து இந்தியா தூண்டுதல் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் பாகிஸ்தானை தாக்கியது என்று அஜர்பைஜானில் குமுறி உள்ளார் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.

கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று முக்கிய 12 இடங்கள் பலத்த சேதமடைந்தன. ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அழிந்த பயங்கரவாத முகாம்களில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தன. 4 இடங்களில் பாகிஸ்தானில் இருந்தன.
நம் நாட்டின் தாக்குதலில் கதிகலங்கிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சியது. தாக்குதலை நிறுத்தும்படி கூறியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக உரிய முறையில் பதிிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே தான் நாடு நாடாக சென்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் பிரதிநிதிகள் இந்தியா எங்களை தாக்கிட்டாங்க என்று குமுறி வருகின்றனர். முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் தான் அஜர்பைஜானில் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மநாடு நடந்தது. இதில் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: இந்தியா தூண்டுதல் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது. அதனை காரணம் காட்டி விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் பிராந்திய அமைதியை சீர்குலைக்க இந்தியா செய்த இன்னொரு முயற்சி தான் இது.
ஈரானின் அணுஆயுத திட்டத்தை முடக்க ‛ஆபரேஷன் ரைசிங் லயன்' நடவடிக்கையை ஒரு நாடு தொடங்கியது. இது ஈரானை ஆக்கிரமிக்கும் செயலாகும். அப்பாவி உயிர்களை குறிவைக்கும் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது'' என உத்தமன் போல் பேசி குமுறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.












Click it and Unblock the Notifications