For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் - பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை

இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேஸ் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியுள்ள பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்ற அதே நேரத்தில் இந்தியா கேட் அருகே அமைந்துள்ள டாக்டர் அப்துல்கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India Will Ensure Safety of Israelis says Israel PM Netanyahu

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. தகவலறிந்த டெல்லி காவல்துறையினர் குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடித்த இடத்திற்கு அருகே வேறு ஏதும் குண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குண்டுசெயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தலைநகரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இஸ்ரேஸ் அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

டெல்லி: இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு - மும்பை இஸ்ரேல் துணைத்தூதரக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு டெல்லி: இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு - மும்பை இஸ்ரேல் துணைத்தூதரக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

இதனிடைய இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இஸ்ரேல் பாதுகாப்பு ஆலோசகர் மெய்ர் பென் ஷபாட்டை தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பு சம்பவம், நடைபெற்று வரும் விசாரணை குறித்து விவரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்பதில் முழு நம்பிக்கை உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Israel PM Benjamin Netanyahu conveyed to PM Modi that Israel has full confidence that the Indian authorities will do a thorough investigation of the incident and ensure the safety of Israelis and Jews who are there speaking in connection with the bombing near the Israeli embassy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X