நாகலாந்தில் ரகசிய தீவிரவாத பயிற்சி மையம்... திட்டமிட்டு தாக்கி அழித்தது இந்திய ராணுவம்
மணிப்பூர்: தனிநாடு கேட்டு நாகலாந்தில் ஆயுதம் ஏந்தி போராடி வரும் நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) பிரிவினைவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய ராணுவ வீரர்கள் நேற்று தாக்கி அழித்தனர்.
தனி நாகாலாந்து நாடு கோரி நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) அமைப்பு போராடி வருகிறது. மாசே துங்கின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தனி நாடு அமைய வேண்டும் என்றும் கோரி தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மணிப்பூரின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், அஸ்ஸாமில் நாகா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்
இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் அருகே கெக்ரு நாகா என்ற கிராமத்தில் ரகசியமாக தீவிரவாத பயிற்சி முகாம் நடத்தி வருவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த முகாமைச் சேர்ந்தவர்கள் அருகில் இருந்த கிராமத்தினரை மிரட்டி பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பயிற்சி முகாமை சுற்றி வளைத்த ராணுவத்தினர், அந்த முகாமை மொத்தமாக அழிக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று அந்த முகாம்மை ராணுவத்தினர் தாக்கி அழித்தனர்.
அந்த முகாமில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், எம்-16 ரக அமெரிக்க துப்பாக்கிகள், தீவிரவாதிகளின் சீருடைகள், ஷூக்கள் என பலவற்றை கைப்பற்றினர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications