பிளான் செய்து அடித்த இந்திய ராணுவம்.. பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பாராட்டு
வாஷிங்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறார் என்று நினைத்தேன். ஆனால், இந்திய ராணுவத்தினர் மிக கவனமாக திட்டமிட்டு தாங்கள் யார் என்பதை நிரூபித்து விட்டனர் என்று பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால், நடுவானில் வைத்தே இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து வந்த 8 ஏவுகணைகளையும் தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தன.
இதைத்தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறார் என்று ஆரம்பகட்டத்தில் நினைத்தேன். ஆனால், இந்திய ராணுவத்தினர் மிக கவனமாக திட்டமிட்டு தாங்கள் யார் என்பதை நிரூபித்து விட்டனர் என்று பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பென்டகனின் முன்னாள் அதிகாரியும், அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த உறுப்பினருமான மைக்கேல் ரூபின் கூறுகையில், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து மோதலைத் தொடங்கிவிட்டது. இந்தியர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று நான் ஆரம்பத்தில் விமர்சித்தேன். ஆனால் இந்திய இராணுவம் கவனமாகத் திட்டமிட்டு தாங்கள் யார் என்பதை காட்டியுள்ளது. பாகிஸ்தான் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதோ ஒரு வழியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு குழியைத் தோண்டுவதற்கான முதல் விதி என்பது நீங்கள் ஒரு குழியில் இருக்கும்போது, குழி தோண்டுவதை நிறுத்த வேண்டும் என்பதுதான். இதனை அசிம் முனீர் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை அமெரிக்கா குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications