சிங்கப்பூரில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கிழித்த இந்தியர் கைது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது முன்னாள் காதலியான பிலிப்பைன்ஸை சேர்ந்த பணிப்பெண்ணை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் பாலையன் முருகதாஸ்(41). கட்டுமானப் பணி செக்டரில் வேலை செய்து வருகிறார். அவரும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஆலன் ரெமிடியோஸ் அடோல்போ(38) என்பவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அடோல்போ சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

காதல் முறிவுக்கு பிறகு பாலையன் 7 செ.மீ. நீளமான கத்தியை எடுத்து அலோட்போவின் முகம், இடது மணிக்கட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் கிழித்தார். இதனால் படுகாயம் அடைந்த அடோல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகம் ரத்தத்தை இழந்த அடோல்போ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலையனை கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது கசையடி கிடைக்கும். போலீசார் பாலையனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications