Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஸ்மதி அரிசி - தேயிலை இனி கிடைக்காது.. ஈரான் மக்களை தண்டித்த டிரம்ப்.. நம் நாட்டுக்கு புது சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஈரான் மக்கள் விரும்பி உண்ணும் இந்திய பாஸ்மதி அரிசி மற்றும் இந்திய தேயிலை ஏற்றுமதி அங்கு கிடைக்காது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதோடு இந்திய பாஸ்மதி அரிசி, தேயிலை ஏற்றுமதியாளர்கள் புதிய மார்க்கெட்டை தேடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானும், நம் நாடும் நல்ல நட்பில் உள்ளன. ஆனால் ஈரானும், அமெரிக்காவும் எதிரிகளாக இருக்கின்றன. ஈரானை முடக்க அமெரிக்கா தொடர்ந்து வேலை செய்து வருகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஈரான் மோதியது. அப்போது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக கூறி அணுசக்தி மையங்களில் அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதன்பிறகும் மோதல் தொடர்ந்து வருகிறது.

தற்போது ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஈரானை தணிமைப்படுத்த டிரம்ப் விரும்புகிறார். அதன்படி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் தான் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாடுகளை தடுத்து நிறுத்தும் செயலை வரி விதிப்பின் மூலமாக டிரம்ப் முன்னெடுத்துள்ளார். இது ஈரானுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

நம் நாடும் கணிசமான அளவுக்கு ஈரானுடன் வர்த்தகம் செய்து வருகிறது. ஏற்கனவே டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படியான சூழலில் நட்பை தாண்டி ஏற்றுமதியாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரம்பின் புதிய 25 சதவீத வரி மிரட்டல் நம் நாடும் அந்த வர்த்தகத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் நம் நாட்டில் உள்ள பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 2024-25 நிதியாண்டில் ஈரான் - இந்தியா இடையே 1.68 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடந்தது. இது நம் நாட்டின் மொத்த வர்த்தகத்தில் 0.15% ஆக இருந்தது. குறிப்பாக நம் நாட்டில் இருந்து ஈரானுக்கு 1.24 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பிரதானமான பொருள் என்னவென்றால் அது பாஸ்மதி அரிசி தான்.

ஈரான் நாட்டு மக்கள் தொகை 9 கோடியாக உள்ளது. அவர்கள் பாஸ்மதி அரிசியை உணவுக்காக பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நம் நாட்டில் இருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசி கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நம் நாட்டின் பாஸ்மதி அரிசிக்கு 2வது பெரிய சந்தையாக ஈரான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை ஈரான் மக்கள் விரும்பி சாப்பிடுவது தான்.

கடந்த 2025 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை இந்தியா 5.98 லட்சம் டன் பாஸ்மதி அரிசியை ஈரானுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போது பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாஸ்மதி ஏற்றுமதி நம் நாட்டில் தேக்கமடைய தொடங்கி உள்ளது.

அதேபோல் நம் நாட்டின் ஆர்த்தடாக்ஸ் தேயிலைக்கு ஈரான் பெரிய சந்தையாக உள்ளது. ஈரான் ஆண்டுக்கு 40-50 மில்லியன் கிலோ இந்திய தேயிலையை வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதனால் நம் நாட்டின் தேயிலைக்கு ஈரான் முக்கிய சந்தையாக உள்ளது. கடந்த 2025 ஜனவரி முதல் நவம்பர் வரை 10.69 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் நம் நாட்டில் இருந்து 45.66 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியாகிறது. இதில் பெரும்பகுதி ஈரானை செல்கிறது. இப்படியான சூழலில் டொனால்ட் டிரம்பின் 25 சதவீத வரி மிரட்டல் விடுத்துள்ளால் எதிர்காலத்தில் ஈரானுக்கான பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை ஏற்றுமதி முற்றிலுமாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஒருகாலத்தில் நம் நாட்டுக்கு அதிகளவில் கச்சா எண்ணெயை வழங்கி வந்தது. ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் கச்சா எண்ணெய் வாங்குவதை நம் நாடு நிறுத்தியது. இப்போது மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஈரானை குறிவைத்துள்ளார்.

அதோடு ஈரானுடன் எந்த நாடும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று கூறி வருகிறார். மீறினால் 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில் நம் நாட்டுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் - இந்தியா வர்த்தகம் மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+