துபாயில் இந்திய லெதர் பொருட்கள் கண்காட்சி: இந்திய தூதர் துவக்கி வைத்தார்
துபாய்: துபாயில் இந்திய லெதர் பொருட்கள் கண்காட்சியினை அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் 9.12.2013 அன்று லீ மெரிடியன் ஹோட்டல் கண்காட்சி அரங்கில் திறந்து வைத்தார்.
இக்கண்காட்சி இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் லெதர் எக்ஸ்போர்ட்ஸ் கவுன்சில், இந்திய தூதரகம் மற்றும் ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்றது.

ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா பேசுகையில், இந்தியாவில் இருந்து 34க்கும் மேற்பட்ட லெதர் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றன. அமீரகத்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றன என்றார்.
அமீரகத்துக்கான இந்திய தூதர் தனது உரையில், லெதர் எக்ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் இந்த கண்காட்சி மூலம் அமீரகம், இந்தியா இடையே இத்துறையில் வர்த்தகம் அதிகமாக வாய்ப்பு ஏற்படும் என்றார்.
இந்திய லெதர் எக்ஸ்போர்ட்ஸ் கவுன்சில் எக்சிகியூடிவ் டைரக்டர் ரமேஷ் குமார் ஐ.ஏ.எஸ். தனது உரையில், துபாய் ஒரு நல்ல சந்தையாக நிலவுவதால் இங்கு கண்காட்சி நடத்த முடிவெடுத்தோம். இக்கண்காட்சி மூலம் லெதர் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க உதவும் என்றார்.
நிகழ்ச்சியில் ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் புரஃபஷனல் கவுன்சில் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய கன்சல் ராஜகோபால், இந்திய வர்த்தக பிரமுகர்கள், தமிழகத்தில் இருந்து வந்திருந்த லெதர் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சி குறித்து மேலும் விபரம் அறிய 050 729 3522 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இணையத்தளம்: www.clebsmdubai.com
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications