அமெரிக்காவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடி: இந்திய தொழிலதிபருக்கு 30 வருட சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியில் தொடர்புள்ள இந்திய தொழிலதிபருக்கு, 30 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிப்பவர் வினோத் டட்லானி (51). இவர் அங்கு ஜுவல்லரி ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவர்போலியான முகவரியை காண்பித்து 7 ஆயிரத்துக்கும் மேற்பபட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளார். இதற்கு மேலும் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பல ஷாப்பிங் மால்களில் எவ்வளவு பொருள் வாங்கமுடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கி குவித்துள்ளார்.
மொத்தம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்த மோசடி நடந்துள்ளது. போலி முகவரியையும், கிரெடிட் ஃபுரொபைலையும் உருவாக்குவதன் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இவரது மோசடி குறித்து தெரியவந்ததும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது செய்த குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்த வழக்கு நியூஜெர்சி கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. மாவட்ட நீதிபதி அன்னே தாம்சன் அளித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட வினோத் டட்லானி மற்றும் அவரது 16 கூட்டாளிகளும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்களுக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications