அமெரிக்காவில் மகளின் திருமண ரிஷப்ஷனில் இருந்து மாயமான இந்தியர் பிணமாக கண்டுபிடிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடந்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று காணாமல் போன இந்தியர் ஏரியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாத் மொபார்டி(55) என்பவரின் மகள் துர்கா மொபார்டி(29) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வால்நட் குரோவ் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கும் ராஜேஷ் கட்டா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை அடுத்து கடந்த 13ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொள்ள பிரசாத் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கிருந்து தனியாக நடந்து சென்றார். நடந்து சென்றவர் மாயமாகிவிட்டார்.
அவரை அவரது குடும்பத்தாரும், போலீசாரும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் பிரசாத் பிணமாக மிதந்ததை கடந்த திங்கட்கிழமை பார்த்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரசாத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக போலீசார் பிரசாத்தை 72 மணிநேரம் தேடிவிட்டு அவர் கிடைக்காததால் தேடலை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications