Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மெகா ஜாக்பாட்.." அமீரகத்தில் இந்தியருக்கு அடித்த லக்! புத்தாண்டில் ரூ. 44 கோடி வென்ற டிரைவர்.. செம

Subscribe to Oneindia Tamil

அமீரகம்: ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ. 44 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள், அங்கே பல ஆண்டுகள் பணிபுரிகிறார்கள்.

Indian man working as Driver In UAE Wins ₹ 44 Crore Lottery On New Year

ஜாக்பாட்: அப்படி ஐக்கிய அமீரகத்தில் உள்ள அல் ஐன் என்ற இடத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஒருவருக்கு மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடந்த பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு 20 மில்லியன் திர்ஹம் கிடைத்துள்ளது. இது இந்திய மசிப்பில் சுமார் ரூ. 44 கோடியாகும். சீரிஸ் 259 பிக் டிக்கெட் லைவ் டிராவில் வென்ற இந்த இந்தியரின் முனவர் ஃபேரூஸ்.

அங்கே டிரைவராக பணிபுரிந்து வந்த ஃபோரூஸுக்கு அதில் வந்த வருமானம் போதவில்லை. இதனால் வேறு எப்படியாவது கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என அவர் யோசித்துள்ளார். இதற்காகவே அவர் லாட்டரியை வாங்கத் தொடங்கியுள்ளார். இதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஃபைரூஸ் லாட்டரியை வாங்கியுள்ளார். இருப்பினும், இத்தனை காலத்தில் அவருக்குப் பெரிதாக எந்தவொரு பரிசும் கிடைத்தது இல்லை.

ரூ.44 கோடி: இந்த சூழலில் தான் அவருக்கு இந்திய மதிப்பில் 44 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. அதேநேரம் இந்த பணத்தை அவர் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. லாட்டரி டிக்கெட் வாங்க தனக்கு உதவிய 30 பேருக்கு இந்த பரிசுத் தொகையை அவர் பகிர்ந்து கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இப்படியொரு விஷயம் நடக்கும் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் நான் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க எனக்குக் கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது. இனிமேல் நான் எப்போதும் பணத்திற்குப் பின்னால் ஓட தேவைப்படாது" என்றார். ஃபேரூஸைத் தவிர, இந்திய, பாலஸ்தீனிய, லெபனான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு 100,000 திர்ஹம்கள் மதிப்புள்ள ரொக்கம் லாட்டரி பரிசாகக் கிடைத்துள்ளது.

மற்றொரு இந்தியர்: இதே நாளில் நடந்த மற்றொரு லாட்டரியில் இன்னொரு இந்தியரான சுதேஷ் குமார் குமரேசன் என்பவருக்கு டிசம்பர் மாதத்திற்கான நான்காவது வாராந்திர இ-டிராவில் ஜாக்பாட் அடித்தது. அதில் அவருக்கு 10 லட்ச திர்ஹாம்கள் அதாவது தோராயமாக ரூ.2.26 கோடி பரிசாகக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. எதிஹாட் விமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்த குமரேசன், அபுதாபியில் வசித்து வருகிறார்.

இது குறித்து அவர் அந்நாட்டு ஊடகத்திடம் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நான் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தான் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். இந்த முறை எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி எண்ணை எனது ஏழு வயது மகள் தான் தேர்வு செய்தார். இந்த பரிசு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் வீடு ஒன்றை வாங்கி இருந்தோம். அந்த கடனை கட்ட இந்த பணம் உதவும்" என்றார்.

இதேபோலத் தான் கடந்த ஆண்டு, பெங்களூருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும் அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் டிரா 250இல் ஜாக்பாட் அடித்தார். அவருக்கும் ரூ. 44 கோடி ஜாக்பாட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+