இங்கிலாந்து மார்க்கெட்டுக்குள் பஸ்ஸை கொண்டு போய் மோதிய 77 வயது "இந்தியன்" தாத்தா!
லண்டன்: 77 வயதான இந்தியர் ஒருவர் ஓட்டிச் சென்ற டபுள் டெக்கர் பஸ் இங்கிலாந்தில் விபத்துக்குள்ளாகி சூப்பர் மார்க்கெட்டில் போய் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள்.
அது ஒரு டபுள் டெக்கர் பஸ் ஆகும். அந்தப் பஸ்ஸை ஓட்டியவர் பெயர் கைலாஷ் சந்தர். இவர் லீமிங்க்டன் ஸ்பா என்ற நகரின் முன்னாள் மேயர் ஆவார். சம்பவத்தன்று பஸ்ஸை ஓட்டிச் சென்ற அவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் சாலையோரம் இருந்த மார்க்கெட்டுக்குள் புகுந்து விட்டது. அதில் சிக்கி 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நிலை தடுமாறி ஓடிய அந்த பஸ், முதலில் பிளாட்பாரத்தில் ஏறி, அங்கிருந்து நான்கு விளக்குக் கம்பங்களை மோதிச் சாய்த்து பின்னர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மோதி நின்றது.
லேபர் கட்சியைச் சேர்ந்தவர் சந்தர். இவர் வார்விக்ஷயர் கவுன்டியில் உள்ள லீமிங்க்டன் ஸ்பா நகர மேயராக இருந்தவர்.
இவர் ஏற்படுத்திய விபத்தால் 8 வயது சிறுவன் ரோவன் பிட்ஸெரால்ட், 70 வயதான டோரா ஹான்காக்ஸ் என்ற பெண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்டேஜ்கோச் என்ற பஸ் நிறுவனத்தில் 42 ஆண்டு காலம் பணியாற்றியவர் இவர். சிறந்த டிரைவராகவும் இருந்தவர். ஆனால் தற்போது பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டார்.
விபத்தில் பலியான சிறுவன் ரோவன், விபத்தை சந்தித்த பஸ்ஸின் மாடிப் பகுதியில் தனது 9 வயது சகோதரனுடன் பயணித்தவன் ஆவான். அதில் சகோதரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 6 பேரும் காயமடைந்தனர். அவர்களில் சந்தரும் ஒருவர்.
விபத்தில் உயிரிழந்த இன்னொருவரான மூதாட்டி டோரா, சாலையோரமாக பிளாட்பாரத்தில் நடந்து சென்றவர் ஆவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications