41 வயது பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூரில் 17 வருட சிறை, 24 கசையடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பலாத்கார வழக்கில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞருக்கு 17 வருட சிறையும், கசையடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி நபரான கெல்வின் சிங் ஜக்ஜித் (25). இவர் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி நள்ளிரவு வேளையில் கென்சிங்டன் சாலையில் சைக்கிளில் பயணித்தார்.

Indian origin man gets jail and caning for raping woman

அதே ரோட்டில் எதிரே இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ஒரு பெண்ணை (41 வயது) கெல்வின் சிங் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறிக்கு முயற்சி செய்தார்.

தனது கைப்பையில் அந்தப் பெண் சுமார் 800 டாலர் பணத்தை வைத்திருந்தார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண், அருகாமையில் இருந்த ஒரு வீட்டின் மதில் சுவற்றின் உள்ளே தனது கைப்பையை தூக்கி வீசினார்.

பணம் கிடைக்காமல் ஆத்திரமடைந்த கெல்வின், கத்திமுனையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அதே இடத்தில் அந்த பெணம்ணை பலாத்காரம் செய்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை தேடிவந்த போலீசார், மூன்று நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் சைக்கிளில் சுற்றி திரிந்த கெல்வின் சிங்கை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கெல்வினுக்கு 17 ஆண்டு சிறைவாசமும், 24 கசையடிகளும் தண்டனையாக விதித்து உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When Indian origin man Kelvin's robbery attempt was foiled by the woman, the 25-year-old sexually assaulted and raped her.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற